இன்று மாலை முதல் பெளர்ணமி... திருவண்ணாமலை கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு!
Dinamaalai January 02, 2026 10:48 AM

இன்று ஜனவரி 2ம் தேதி மாலை முதல் மார்கழி மாத பவுர்ணமி துவங்க இருப்பதால், திருவண்ணாமலையில் பெளர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் எது என அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

பக்தர்கள் கிரிவலம் செல்ல உகந்த நேரமாக இன்று மாலை 6.45 மணிக்கு தொடங்கி, 3ம் தேதி மாலை 4.43 மணிக்கு முடிவடைகிறது. இதனால் இன்றிரவு கிரிவலம் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். பெளர்ணமியை முன்னிட்டு வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னை – திருவண்ணாமலை இடையே வேலூர், விழுப்புரம் வழியாக சிறப்பு ரயில்களும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து நாளை 3ம் தேதி ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது. அந்த நாளில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், ஆருத்ரா தரிசனம் மற்றும் மாட வீதி உலா நடைபெற உள்ளது.

அரையாண்டு தேர்வு விடுமுறை மற்றும் புத்தாண்டு தொடர்ச்சியாக பவுர்ணமி வருவதால் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. தரிசனத்திற்கு 4 முதல் 5 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனை கருத்தில் கொண்டு சிறப்பு மற்றும் முன்னுரிமை தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பவுர்ணமி நாட்களில் ராஜகோபுரம் வழியாக பொது தரிசனம் மட்டுமே அனுமதிக்கப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.