பல உசிரு என்னை நம்பி ரயில்ல வருது... கேட் கீப்பர் நெகிழ்ச்சி!
Dinamaalai January 07, 2026 02:48 AM

 

ஒரு உயிர்… பல உயிர்கள்… கடமையில் உறுதியாய் நின்ற இளம் கேட் கீப்பர்

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே பின்னவாசல் கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த 3-ம் தேதி இரவு உடல்நலக் குறைவால் ஆபத்தான நிலையில் இருந்தார். அவரை உறவினர்கள் பைக்கில் ஏற்றி பேராவூரணி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது ராமேஸ்வரம் – தாம்பரம் விரைவு ரயில் வருவதால் பின்னவாசல் – சித்தாதிக்காடு ரயில்வே கேட் மூடப்பட்டிருந்தது.

கேட்டை திறக்குமாறு உறவினர்கள் கேட்டபோது, கேட் கீப்பராக பணியாற்றும் இளம் பெண் ஸ்டெலிபினோ, ரயில் ஆயிங்குடியை தாண்டியதால் கேட் திறக்க முடியாது என உறுதியாக தெரிவித்தார். “ஒரு உயிரும்மா” என உறவினர்கள் கெஞ்ச, “என்னை நம்பி ரயிலில் பல உயிர்கள் வருது” என்று கலங்கிய குரலில் கூறினார். பின்னர் தனது பைக் அந்தப் பக்கம் இருப்பதாக சொல்லி, அதை பயன்படுத்திக் கொள்ளுமாறு கூறினார்.

உடனே இளம்பெண்ணை தூக்கி தண்டவாளத்தை கடந்து கொண்டு சென்று, வேறு பைக்கில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் வீடியோவாக பரவி வைரலானதை தொடர்ந்து, கடமை உணர்வுடன் செயல்பட்ட ஸ்டெலிபினோவை ரயில்வே அதிகாரிகள் பாராட்டி வருகின்றனர். ரயில்வே பணியாளர்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர் எனவும், இனி அவரது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.