சமூக வலைதளங்களில் தற்பொழுது வைரலாகி வரும் நாக்பூரைச் சேர்ந்த தெருவோர வியாபாரியின் ‘பான் சாட்’ தயாரிப்பு முறை உணவுப் பிரியர்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக செரிமானத்திற்காகவோ அல்லது வாய் புத்துணர்ச்சிக்காகவோ உண்ணப்படும் வெற்றிலையை (பான்), ஒரு காரசாரமான ‘சாட்’ உணவாக மாற்றியுள்ளார் இந்த வியாபாரி.
இதனால் வெற்றிலையைத் துண்டுகளாக வெட்டி, அதில் தயிர், புளிப்பு மற்றும் காரச் சட்னிகள், பொரித்த சேவ், மசாலாப் பொடிகள் மற்றும் மாதுளை முத்துக்களைச் சேர்த்து அவர் தயாரிக்கும் விதம் பார்ப்பதற்கே மிகவும் சுவையாகவும், புதுமையாகவும் அமைந்துள்ளது.
View this post on Instagram
A post shared by Ashish sondhiya (@om_caterers_nagpur)
“>
மேலும் பாரம்பரிய உணவு வகைகளை நவீன காலத்திற்கு ஏற்ப மாற்றியமைக்கும் இந்த முயற்சிக்கு இணையத்தில் ஆதரவும், விமர்சனங்களும் கலந்தே வருகின்றன. ‘பான்’ மற்றும் ‘சாட்’ ஆகிய இருவேறு சுவைகளை ஒன்றாக இணைப்பது ஒரு வித்தியாசமான அனுபவம் எனச் சிலர் பாராட்டி வருகிறார்கள்.
இதனால் பாரம்பரிய உணவுகளின் தனித்தன்மை கெடக்கூடாது எனச் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், புதுமையான உணவுகளைத் தேடிச் செல்லும் உணவு ஆர்வலர்கள் மத்தியில் நாக்பூரின் இந்த ‘பான் சாட்’ பெரும் வரவேற்பைப் பெற்று, இணையதளங்களில் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.