தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் சமீபகாலமாக பிற கட்சியில் இருப்பவர்கள் விலகி மாற்றுக் கட்சியில் இணைந்து வருவது அதிகரித்து வருகிறது.
இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் முக்கிய நிர்வாகிகளும் கட்சியிலிருந்து விலகுவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
இந்த நிலையில் சென்னை ஆலந்தூர் தொகுதி நந்தம்பாக்கம் பகுதியில் அதிமுக கட்சியை சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் அமைச்சர் தமோ அன்பரசன் முன்னிலையில் இன்று திமுக கட்சியில் இணைந்தனர்.
குறிப்பாக இளைஞர்கள் அதிக அளவில் இணைந்த நிலையில் அவர்களுக்கு கட்சியின் துண்டு அணிவித்து வரவேற்றனர். மேலும் விரைவில் இன்னும் பல கட்சிகளை சேர்ந்தவர்கள் திமுகவில் இணைய வாய்ப்புள்ளதாகவும் நிர்வாகிகள் கூறினர்.