தஞ்சாவூர், ஜனவரி 07 : தஞ்சாவூர் (Tanjore) அரசு மருத்துவமனையில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளுக்கு அந்த மருத்துவமனையில் பணியாற்றி வந்த நர்ஸ் ஒருவர் நிற்க வைத்து டிரிப்ஸ் ஏற்றிய நிலையில், அவர் மீது தற்போது நடவடிக்கை பாய்ந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானதை தொடர்ந்து அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மெற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில், நோயாளிகளுக்கு நிற்க வைத்து டிரிப்ஸ் ஏற்றப்பட்ட விவகாரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
புற்றுநோய் நோயாளிகளுக்கு நிற்க வைத்தி டிரிப்ஸ் ஏற்றிய நர்ஸ்தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சில பொதுமக்கள் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், சம்பவத்தன்று சிலர் சிகிச்சை பெறுவதற்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அப்போது பணியில் இருந்த நர்ஸ் ரஞ்சிதா, நோயாளிகளை படுக்கையில் படுக்க வைத்து டிரிப்ஸ் ஏற்றுவதற்கு பதிலாக நோயாளிகளை மருந்து வழங்கும் அறைக்கு அழைத்துச் சென்று அங்கு அவர்களை நிற்க வைத்து டிரிப்ஸ் ஏற்றியுள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க : மழைக்கு ரெடியா மக்களே? மீண்டும் தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை.. எங்கெல்லாம் மழை இருக்கும்?
நர்ஸை பணியிடை நீக்கம் செய்த மருத்துவமனை நிர்வாகம்இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் துறை ரீதியான விசாரணையை தொடங்கியது. விசாரணையின் முடிவில் ரஞ்சிதாவை பணியிடை நீக்கம் செய்து மருத்துவமனை நிர்வாக உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தை தொடர்ந்து, மருத்துவர்கள் மற்றும் நர்சுகள் நோயாளிகளுக்கு அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள வார்டுகளுக்கு சென்று சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
இதையும் படிங்க : திருப்பரங்குன்றம் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தமிழக அரசு முடிவு!
மாறாக இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பொது சுகாதாரத்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம் தொடர்பான வீடியோக்கள் வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.