கேரள மாநிலம் ஹரிப்பாட் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஆறு மாதக் குழந்தையை யானையின் தும்பிக்கையில் அமர்த்த முயன்றபோது, குழந்தை தவறி யானையின் காலடியில் விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு மாதங்களுக்கு முன்புதான் தனது பாகனை அடித்துக் கொன்ற ‘ஹரிப்பாட் ஸ்கந்தன்’ என்ற யானைக்கு முன்னால் இந்த ஆபத்தான செயல் அரங்கேறியுள்ளது. தற்காலிக பாகனின் குழந்தையை மற்றொரு பாகன் யானையின் தும்பிக்கையில் வைக்க முயன்றபோது, குழந்தை கைதவறி கீழே விழுந்தது.
நல்லவேளையாக யானை அமைதியாக இருந்ததால் குழந்தை எவ்வித காயமுமின்றி உயிர் தப்பியது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்தச் சம்பவம், சமூக வலைதளங்களில் வீடியோ வெளியான பிறகே வெளிச்சத்திற்கு வந்தது.
குழந்தைகளின் பயத்தைப் போக்க யானையின் தும்பிக்கையில் அமர வைக்கும் பழைய பழக்கம் ஆபத்தானது என்பதால் ஏற்கனவே கைவிடப்பட்ட நிலையில், தற்போது நடந்த இந்தச் செயல் குறித்துப் போலீசாரும் தேவஸ்வம் அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
“>
பொறுப்பற்ற முறையில் செயல்பட்ட பாகன் மற்றும் குழந்தையின் பெற்றோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.