டெல்லியில் விநியோகிக்கப்படும் குடிநீரின் தரம் குறித்து சமூக வலைதளங்களில் அவ்வப்போது புகார்கள் எழுந்து வரும் நிலையில், தற்போது ஒரு நபர் வெளியிட்ட வீடியோ இணையத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. அந்த வீடியோவில், தனது வீட்டிற்கு வரும் குடிநீர் மிகவும் சுத்தமாக இருப்பதாகவும், அதில் துவைத்த துணிகள் ‘வெள்ளை வைரங்களைப் போல’ ஜொலிப்பதாகவும் அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இதற்காக டெல்லி முதல்வர் ரேகா குப்தாவிற்கு அவர் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டதுடன், அரசாங்கத்தின் பணிகளை விமர்சித்து தேவையில்லாமல் ‘மீம்ஸ்’ உருவாக்கி கேலி செய்ய வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
“>
சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வரும் இந்த வீடியோ, ஆதரவும் விமர்சனமும் கலந்த பல்வேறு கருத்துகளைப் பெற்று வருகிறது. ஒரு தரப்பினர் அரசின் சேவையை பாராட்டி வரும் நிலையில், மற்றொரு தரப்பினர் இது திட்டமிடப்பட்ட விளம்பரம் என விமர்சித்து வருகின்றனர்.
இருப்பினும், குடிநீர் தரம் குறித்து எதிர்மறையான செய்திகளே அதிகம் வெளியாகும் சூழலில், ஒரு சாமானிய குடிமகன் இவ்வளவு உற்சாகமாகத் தனது நன்றியைப் பதிவு செய்திருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. டெல்லி அரசியல் வட்டாரத்திலும் சமூக வலைதளங்களிலும் தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது.