சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பெண் கடை உரிமையாளர் பல மணிநேரம் கடினமாக உழைத்து ஒரு ஆடையை தைத்து முடித்த நிலையில், வாடிக்கையாளர் அதைக் கண்டு அதிருப்தி அடைந்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஒரு கட்டத்தில் மனமுடைந்த அந்தப் பெண், வாடிக்கையாளரின் காலில் விழுந்து கதறி அழுத காட்சி பார்ப்பவர்களின் நெஞ்சை உருக்கும் வகையில் உள்ளது. “வாடிக்கையாளர் என்பவன் கடவுளா அல்லது எமனா?” என்ற கேள்வியோடு வைரலாகும் இந்த வீடியோ, உழைப்பவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்காத சிலரின் போக்கை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
“>
இந்தச் சம்பவம் சேவைத் துறையில் பணிபுரிபவர்கள் எதிர்கொள்ளும் மன அழுத்தத்தையும் அவமானங்களையும் சுட்டிக்காட்டுகிறது. சிறு வணிகர்கள் மற்றும் கலைஞர்கள் தங்கள் உழைப்பை முழுமையாகத் தந்தாலும், சில வாடிக்கையாளர்களின் முறையற்ற நடத்தை அவர்களை நிலைகுலையச் செய்கிறது.
ஒருவரின் கடின உழைப்பை விமர்சிக்க அனைவருக்கும் உரிமை உண்டு, ஆனால் அதை வெளிப்படுத்தும் விதம் கண்ணியமாக இருக்க வேண்டும் என்பதை இந்த வீடியோ நமக்கு உணர்த்துகிறது. மனிதநேயமற்ற முறையில் நடந்து கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு எதிராக சமூக வலைதளங்களில் தற்போது கண்டனங்கள் குவிந்து வருகின்றன.