சென்னை மெரினா உள்ளிட்ட மாநகர கடற்கரைகளை தூய்மையாக பராமரிக்க சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
மெரினா கடற்கரையில் மட்டும் நாள்தோறும் சராசரியாக 4 டன் குப்பைகள் அகற்றப்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால் சேரும் இந்த குப்பைகளை மேலாண்மை செய்வது பெரும் சவாலாக மாறியுள்ளது. இதனை தடுக்கும் பொருட்டு, கடற்கரைக்கு வருபவர்கள் குப்பைகளை அங்கங்கே வீசாமல், அங்கிருக்கும் குப்பை தொட்டிகளில் மட்டுமே போட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த விதியை மீறி கடற்கரை மணற்பரப்பிலோ அல்லது பொது இடங்களிலோ குப்பைகளை கொட்டுபவர்களுக்கு உடனடியாக 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. கடற்கரையின் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தூய்மைப் பணியாளர்கள் மற்றும் கண்காணிப்புக் குழுவினர் கடற்கரைப் பகுதிகளில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபடுவார்கள் என்றும், விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.
Edited by Siva