கழிவறையைச் சுத்தம் செய்வது என்பது பலருக்கும் சற்று கடினமான மற்றும் முகம் சுளிக்க வைக்கும் வேலையாகத் தோன்றலாம். ஆனால், இதற்காக கைகளைப் பயன்படுத்தாமல், எந்த செலவும் இன்றி வீட்டிலுள்ள பொருட்களைக் கொண்டே சுத்தம் செய்ய ஒரு புதிய ‘ஜுகாட்’ (யுக்தி) முறை இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்குத் தேவையானது எல்லாம் நாம் தூக்கி எறியும் சில பழத்தோல்கள் மற்றும் ஒரு மேஜிக் வெள்ளைப்பொடி மட்டுமே.
இந்த முறையில், பழத்தோல்களைக் கொண்டு தயாரிக்கப்படும் திரவம் கடினமான கரைகளை நீக்க உதவுகிறது, இதனால் கைகளால் தேய்க்க வேண்டிய அவசியமில்லாமல் கழிவறை புத்தம் புதியது போல ஜொலிக்கும். இந்த எளிய முறையை ‘பிங்கி’ என்ற பெண்மணி பகிர்ந்துள்ளார். முதலில் ஆரஞ்சு அல்லது எலுமிச்சை பழத்தோல்களை நீரில் கொதிக்க வைத்து, அதனுடன் ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து ஒரு கலவையை உருவாக்க வேண்டும்.
இந்த கலவையை கழிவறையின் உட்புறத்தில் ஊற்றி சிறிது நேரம் ஊறவிட்டால், அதிலுள்ள அமிலத்தன்மை மற்றும் சுத்திகரிப்பு பண்புகள் கறை மற்றும் கிருமிகளை முழுமையாக அகற்றிவிடும். இது ரசாயன கிளீனர்களுக்குப் பதிலாக ஒரு இயற்கை மாற்றாக அமைவதோடு, கழிவறையில் துர்நாற்றம் வீசாமல் நல்ல நறுமணத்தையும் தருகிறது.