ஜம்மு காஷ்மீரின் நௌஷேரா செக்டாரில் கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு அருகே பாகிஸ்தான் ஆளில்லா விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது. நேற்று மாலை இந்த சம்பவம் நடந்ததாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இதே பகுதியில் மேலும் சில ஆளில்லா விமானங்கள் காணப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
View this post on InstagramA post shared by Informed (@informed.in)
ராணுவத்தினர் இயந்திரத் துப்பாக்கிகளை பயன்படுத்தி டிரோன்களை சுட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த டிரோன்கள் ஆயுதங்கள் அல்லது போதைப்பொருட்களை வீசியுள்ளனவா என்பதை கண்டறிய தேடுதல் வேட்டை நடைபெறுகிறது. பாதுகாப்பு படைகள் அப்பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளன.
இதே நேரத்தில் ராஜௌரி, சம்பா, பூஞ்ச் மாவட்டங்களிலும் டிரோன் போன்ற பொருட்கள் வானில் பறந்ததாக தகவல் வந்துள்ளது. கிராமங்கள் மீது சில நிமிடங்கள் வட்டமிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!