சாதாரண தொழிலாளி டூ உயர் அதிகாரி: சாம்சங் சென்னை ஆலையின் ஆச்சரியமூட்டும் மாற்றங்கள்!
ET Tamil February 28, 2026 01:48 PM
ஸ்ரீபெரும்புதூர் சாம்சங் ஆலை வெறும் தயாரிப்பு மையமாக மட்டுமன்றி, தொழிலாளர்களின் கனவுகளை நனவாக்கும் களமாகவும் திகழ்கிறது. முறையான பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் மூலம், சாதாரண நிலையில் பணியில் சேர்ந்தவர்கள் இன்று உயர் அதிகாரிகளாகவும், துறை வல்லுநர்களாகவும் உருவெடுத்துள்ளனர். ஊழியர்களின் திறன் மேம்பாட்டிற்காக சாம்சங் முன்னெடுக்கும் இந்த வெற்றிகரமான பயணம் குறித்த ஒரு சிறப்பு கட்டுரை இது.
நிஜ மனிதர்களின் வெற்றிக் கதைகள்சாம்சங் ஆலையில் பணியாற்றி முன்னேறிய சிலரின் அனுபவங்கள் இங்கே
> கார்த்திக் (ஏசி பிரிவு): ஆரம்பத்தில் அடிப்படை உதவியாளராகச் சேர்ந்தார். CLAS மற்றும் CDP போன்ற சாம்சங்கின் சிறப்புப் பயிற்சித் திட்டங்கள் மூலம், இன்று கொள்முதல் பிரிவில் (Procurement) ஒரு முக்கியப் பொறுப்பில் உள்ளார். "தொடர் கற்றல் என்னை ஒரு சிறந்த மனிதனாக மாற்றியுள்ளது" என்கிறார்
> தமிழ்ச்செல்வி (சிஸ்டம் ஸ்டாக் மேனேஜ்மென்ட்): 2007-ல் 12-ம் வகுப்பு முடித்த கையோடு பணியில் சேர்ந்தார். 15 ஆண்டுகால உழைப்பால், சாதாரண ஆபரேட்டர் நிலையில் இருந்து லைன் மேனேஜ்மென்ட் நிலைக்கு உயர்ந்தார். இப்போது தனது கனவுத் துறையான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவில் (R&D) சாதித்து வருகிறார்.
>ராஜாராம் (மெக்கானிக்கல் மற்றும் சிவில் குழு): ஒரு டெக்னீஷியனாகத் தொடங்கிய இவரது பயணம், இன்று திட்டமிடல் மற்றும் குழுத் தலைமை (Team Leadership) வரை வளர்ந்துள்ளது. மேலதிகாரிகளின் வழிகாட்டுதலே தனது நம்பிக்கைக்குக் காரணம் என்கிறார்.
> வி. பிரபாசன் (கொள்முதல் பிரிவு): சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு சிஆர்டி டிவி தயாரிப்புப் பிரிவில் சேர்ந்தவர். சாம்சங் ஆலையை ஒரு குடும்பமாகப் பார்க்கும் இவர், இன்று ஒரு முதிர்ச்சியான தலைவராகப் பரிணமித்துள்ளார்.
முன்னேற்றத்திற்கான வழிமுறைகள்சாம்சங் நிறுவனம் தனது ஊழியர்களின் வளர்ச்சிக்காகப் பின்பற்றும் சில முக்கிய அம்சங்கள்:
1. நீண்ட கால முதலீடு: ஊழியர்கள் 12 முதல் 15 ஆண்டுகள் வரை பணியாற்றி, படிப்படியாகத் தங்களின் தொழில்நுட்ப அறிவை வளர்த்துக்கொள்ள வாய்ப்பளிக்கப்படுகிறது.
2. பயிற்சித் திட்டங்கள்: CDP மற்றும் CLAS போன்ற திட்டங்கள் மூலம் தொழிலாளர்களுக்குத் தலைமைப் பண்பு மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் கற்பிக்கப்படுகின்றன.
3. மேற்படிப்பு வசதி: வேலையில் இருக்கும்போதே மேற்படிப்பு படிக்க விரும்பும் ஊழியர்களுக்கு நிறுவனம் ஆதரவு அளிக்கிறது.
4. பதவி உயர்வு: வெறும் அனுபவத்தை மட்டும் பார்க்காமல், ஊழியர்களின் தனித்திறன் மற்றும் மதிப்பீடுகளின் அடிப்படையில் 'அசோசியேட்' போன்ற உயர் பதவிகள் வழங்கப்படுகின்றன.
புதிதாக சேரும் ஊழியர்கள் கவனத்திற்கு "ஆர்வத்துடன் இருங்கள், பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுங்கள், கற்றலை நிறுத்தாதீர்கள்" என்பதே இந்த வெற்றியாளர்களின் தாரக மந்திரம். சாம்சங் சென்னை ஆலையில் வேலைவாய்ப்புகள் வழங்கப்படுவது மட்டுமல்ல, அவை ஊழியர்களின் திறமையால் உள்ளிருந்தே செதுக்கப்படுகின்றனர்” என நிறுவனம் கூறுகிறது.