திடீர் ட்விஸ்ட்... தங்கம், வெள்ளி விலை அதிரடியாக குறைந்தது.! ஒரு சரவனுக்கு எவ்வளவு தெரியுமா.?
கு. அஜ்மல்கான் March 02, 2026 12:44 PM

ஏறி இறங்கும் தங்கம் விலை

தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் புதிய ,புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இதன் காரணமாக தங்க நகைகளை வாங்க முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு சவரன் 30ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தங்கத்தின் விலையானது தற்போது 1.34 லட்சத்தை எட்டி நகைப்பிரியர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தங்கம் விலை தான் அதிகரிக்கிறது வெள்ளியில் முதலீடு செய்யலாம் என திட்டமிட்டவர்களுக்கும் அதிர்ச்சி கொடுக்கும் வகையில் அதுவும் தங்கத்திற்கு இணையாக உயர்ந்துள்ளது. 

தங்கம் விலை உயர்வு காரணம் என்ன.?

தங்கத்தின் விலை உயர்வுக்கு போர் பதற்றமே முக்கிய காரணமாக கூறப்படுகிறது. அதிலும் தற்போது அமெரிக்கா இஸ்ரேல் நாடுகள் இணைந்து ஈரான் மீது போர் தொடுத்து வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. இதனால் பங்கு சந்தை வீழ்ச்சி அடைந்து வருவதால் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை பார்ப்பதால் தங்கத்தில் அதிகளவு முதலீடுகள் அதிகரித்துள்ளது. மேலும் தங்கள் நாட்டின் பணத்தின் மதிப்பை அதிகரிக்க மத்திய வங்கிகள் தங்கத்தை அதிகளவு வாங்கி குவித்து வருகிறது. இதுவும் தங்கம் விலை உயர்வுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் தங்கத்தின் விலையானது வரும் நாட்களில் மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவே தங்க நகை வியாபாரிகள் தெரிவித்து வருகிறார்கள். 

தங்கத்தின் விலை நிலவரம்

  • 26-ம் தேதி கிராமிற்கு 10 ரூபாய் விலை குறைந்து ஒரு கிராம் 14,920 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,19,360 ரூபாய்க்கும் விற்பனை
  • 27-ம் தேதி 20 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 14,900 ரூபாய்க்கும், ஒரு சவரன்  160 ரூபாய் குறைந்து 1,19,200 ரூபாய்க்கும் விற்பனை 
  • 28-ம் தேதி காலையிலும் மாலையிலும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. கிராமிற்கு 650 ரூபாய்  உயர்ந்து 15,550 ரூபாய்க்கு, சவரனுக்கு 5,200 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு சவரன் 1,24,400 ரூபாய்க்கு விற்பனை.
  • நேற்று பிப்ரவரி 1-ஆம் தேதி  ஞாயிற்றுக்கிழமை வணிக சந்தை விடுமுறை நாளிலும் தங்கம் விலை அதிகரித்தது. ஒரு கிராமிற்கு 225 ரூபாய் விலை உயர்ந்து, கிராம் 15,775 ரூபாய்க்கும்,  சவரனுக்கு 1,800 ரூபாய் உயர்ந்து சவரன் 1,26,200 ரூபாய்க்கும் விற்பனை

இன்றைய தங்கம் விலை உயர்வு

போர் காரணமாக தங்கத்தின் விலையானது இன்றும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக தங்கம் கிராம் ஒன்றுக்கு 115 ரூபாய் குறைந்து 15.660 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 920 ரூபாய் குறைந்து 1,25,280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதேபோல வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராம் ஒன்றுக்கு 10 ரூபாய் குறைந்து 315 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளிக்கு 10ஆயிரம் ரூபாய் சரிந்து 3 லட்சத்து 15ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.