காலையிலேயே… “அரசியல் களத்திற்கு நடுவே விஜய் போட்ட வாழ்த்துக்கள்..” எக்ஸ் தளத்தில் வைரலாகும் பதிவு..!!
SeithiSolai Tamil March 02, 2026 03:48 PM

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று (மார்ச் 2, 2026) தொடங்கியுள்ள நிலையில், தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்குத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் (X) தளப் பதிவில், “தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுதும் என் அன்புத் தம்பிகளுக்கும் தங்கைகளுக்கும் வாழ்த்துகள். நாளைய வளமான சமுதாயத்தை உருவாக்க உள்ள நீங்கள் அனைவரும் இந்தத் தேர்வினைப் பதற்றமின்றி, அச்சமின்றி, துணிவுடன் எதிர்கொள்ளுங்கள்.

“>

 

உயர்கல்வியில் சிறந்து விளங்கவும் அட்வான்ஸ் வாழ்த்துகள்; நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம்!” என உற்சாகமூட்டியுள்ளார். சுமார் 8.27 லட்சம் மாணவர்கள் இன்று தேர்வெழுதும் நிலையில், விஜய்யின் இந்த வாழ்த்துப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.