முழுக்க முழுக்க ஃபிலிம் கேமராவில் படமாகும் ரஜினி கமல் படம்!
ராகேஷ் தாரா March 02, 2026 04:14 PM

திரைப்படங்கள் ஃபிலிம் ரீலில் படமாக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. இப்படியான நிலையில் ரஜினி கமல் படத்தை முழுக்க முழுக்க பிலிம் ரீலில் எடுக்க படக்குழு திட்டமிட்டு வருகிறது. படத்திற்கு விண்டேஜ் லுக் கொடுக்கவே இந்த முயற்சியை படக்குழு மேற்கொள்ள இருக்கிறது. ராஜீவ் மேனன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். 

ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பாக இன்பன் உதயநிதி தயாரிப்பில் ரஜினி கமல் இணைந்து நடிக்கும் படத்தின் அறிவிப்பு அண்மையில் வெளியானது. நெல்சன் திலிப்குமார் இந்த படத்தை இயக்குகிறார். ராஜீவ் மேனன் ஒளிப்பதி செய்ய அனிருத் இசையமைக்கிறார். 47 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி கமல் இணைந்து நடிக்கவிருக்கும் இப்படம் அடுத்த ஆண்டு படபிடிப்பு துவங்க இருக்கிறது. 

தற்போது ரஜினிகாந்த் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் தலைவர் 173 படத்தில் அவர் நடிக்க இருக்கிறார். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இப்படத்தை தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். மறுபக்கம் கமல் தற்போது பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து சட்டமன்ற தேர்தல் முடிந்தபின்னர் அன்பறிவு இயக்கத்தில் ஆக்‌ஷன் திரைப்படத்தில் கமல் நடிக்க இருக்கிறார். இதன்பின் ரஜினி கமல் இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. ஜெயிலர் 2 படத்தின் ரிலீஸைத் தொடர்ந்து படத்திற்கான திரைக்கதையை நெல்சன் எழுதுவார். 

ரஜினி கமல் படத்தில் மம்மூட்டி 

ரஜினி கமல் இணைந்து நடிக்கும் இப்படத்தில் மலையாள சூப்பர்ஸ்டார் மம்மூட்டி நடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக ரஜினியுடன் மம்மூட்டி தளபதி படத்தில் இணைந்து நடித்தார். இந்த காம்பினேஷன் ரசிகர்களால் பெரியளவில் கொண்டாடப்பட்டது.

முழுக்க முழுக்க பிலிம் 

ரஜினி கமல் படத்தைப் பற்றிய தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி இப்படத்தை முழுக்க முழுக்க ஃபிலிம் ரீலிஸ் படமாக்க படக்குழு திட்டமிட்டு வருகிறார்கள். ரஜினி கமலின் ஃப்ளாஷ்பேக் காட்சிகள் படத்தில் அதிகம் இருப்பதாலும் மேலும் படத்திற்கு விண்டேஜ் லு கொடுப்பதற்காகவும் இப்படத்தைல் பிலிமில் எடுக்க இருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் ஃபிலிமில் படப்பிடிப்பு நடந்து 15 ஆண்டுகளுக்கும் மேல் ஆகியுள்ளது. மேலும் பிலிமை ப்ராசஸ் செய்யும் வசதிகளும் மும்பையில் மட்டுமே உள்ளன. இதனால் இப்படத்திற்கான படப்பிடிப்பு பட்ஜெட் பெரியளவில் அதிகரிக்கும் என்பதும் குறிப்பிடத் தக்கது. 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.