நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) அரசியல் ரீதியாகப் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுக அளிக்கும் 25 தொகுதி என்ற சலுகையை ஏற்க முடியாது என காங்கிரஸ் கட்சி முடிவெடுத்துள்ளது.
அதே நேரத்தில் தவெக உடன் கூட்டணி வைக்கலாமா என காங்கிரஸ் எம்எல்ஏ-க்களிடம் கருத்து கேட்டதில், பெரும்பாலானோர் திமுக உடனே செல்ல வலியுறுத்தியுள்ளனர்.
காங்கிரஸ் தரப்பிலிருந்து பலர் விஜய்க்கு ஆதரவு தெரிவிப்பதாகக் கூறப்பட்ட நிலையில், இந்த திடீர் மாற்றம் விஜய் தரப்புக்கு ஏமாற்றத்தை அளிப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். முன்னதாக காங்கிரஸ் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை சீட்டு கொடுக்க திமுக முன் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் காங்கிரஸ் கட்சி தமிழக வெற்றிக்கழகத்துடன் கூட்டணி வைக்கும் என அந்த கட்சியின் நிர்வாகிகள் கூறிவந்த நிலையில் தற்போது கூட்டணி வைக்கவில்லை என்று தகவல் வெளியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.