196 ரன் அடிச்சும் தோத்ததுட்டோம்…. ”சஞ்சு சாம்சன் எங்களை முடிச்சுட்டாரு” தோல்விக்கு பின் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பேட்டி….!!
SeithiSolai Tamil March 02, 2026 06:48 PM

நேற்று (மார்ச் 1) கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த டி20 உலகக்கோப்பை ‘சூப்பர்-8’ சுற்றில், வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயித்த 196 ரன்கள் என்ற கடினமான இலக்கை இந்திய அணி அதிரடியாக எட்டிப்பிடித்து மாபெரும் வெற்றி பெற்றது. இப்போட்டியின் தோல்வி குறித்துப் பேசிய வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஷாய் ஹோப், ஆட்டத்தின் போக்கை மாற்றியது சஞ்சு சாம்சன் தான் என்று வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். கொல்கத்தா மைதானம் ரன் சேஸிங்கிற்கு சாதகமானது என்பதால், தங்களது அணி இன்னும் கூடுதல் ரன்களைக் குவித்திருக்க வேண்டும் என்றும் அவர் வருத்தத்துடன் தெரிவித்தார்.

சஞ்சு சாம்சனின் ருத்ரதாண்டவத்தால் நிலைகுலைந்த வெஸ்ட் இண்டீஸ் கேப்டன், “சஞ்சு சாம்சன் ஆட்டத்தை எங்களிடமிருந்து பறித்துவிட்டார்” என்று புகழாரம் சூட்டினார். இந்திய அணி இக்கட்டான சூழலில் இருந்தபோது சஞ்சு காட்டிய அதிரடி, வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர்களைத் திணறடித்தது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தனது பலத்தை மீண்டும் உலகிற்கு நிரூபித்துள்ளதுடன், சஞ்சு சாம்சனின் ஆட்டம் கிரிக்கெட் உலகில் தற்போது பேசுபொருளாகியுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.