இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டல்...சர்ச்சையில் மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குநர் சிதம்பரம்
ராகேஷ் தாரா March 02, 2026 07:44 PM

எர்ணாகுளம் வடக்கு காவல் நிலையத்தில் இளம் பெண் ஒருவர்  மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் இயக்குநர் சிதம்பரம் மீது பாலியல் புகாரளித்துள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு சிதம்பரம் தனது வீட்டில் அத்துமீறி நுழைந்து தவறாக நடந்துகொண்டதாகவும் தன்னை செல்ஃபோனில் வீடியோ எடுக்க முயன்றதாகவும் அந்த பெண் தெரிவித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் சிதம்பரம் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

கடந்த ஆண்டு வெளியான ஹேமா கமிட்டியின் அறிக்கை கேரள திரையுலகில் பெண்களுக்கு எதிராக நடந்த பாலியல் குற்றங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. பல்வேறு முன்னணி நடிகர்கள் , இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் இந்த அறிக்கையில் இடம்பெற்றிருந்தனர். ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானப் பின் மலையாள நடிகர்கள் சங்கமான அம்மாவில் இருந்து மோகன்லால் உட்பட அனைத்து உறுப்பினர்களும் பதவி விலகினர். மேலும் கேரள அரசு சார்பாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றசங்களை விசாரிக்க சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டது. ஹேமா கமிட்டி அறிக்கையைத் தொடர்ந்து பல பெண்கள் தங்களது பாலியல் குற்றவாளிகளை அடையாளம் காட்ட முன்வருகிறார்கள். 

பாலியல் சர்ச்சையில் இயக்குநர் சிதம்பரம் 

கடந்த 2023 ஆம் ஆண்டு மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் மூலம் பான் இந்தியளவில் கவனமீர்த்தவர் சிதம்பரம். அடுத்தபடியாக பாலன் என்கிற படத்தை இயக்கியுள்ளார். இப்படியான நிலையில் சிதம்பரம் மீது இளம் பெண் ஒருவர் எர்ணாகுளம் வடக்கு காவல் நிலையத்தில் பாலியல் புகாரளித்துள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு சிதம்பரம் தனது வீட்டில் அத்துமீறி நுழைந்து தவறாக நடந்துகொண்டதாகவும் தன்னை செல்ஃபோனில் வீடியோ எடுக்க முயன்றதாகவும் அந்த பெண் தெரிவித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் சிதம்பரம் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மூன்று பிரிவுகளின் கீழ் சிதம்பரம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணிடம் காவல்துறையினர் வாக்குமூலம் பெற உள்ளனர். மேலும் வழக்கு தொடர்பான விசாரணைக்கு சிதம்பரம் ஆஜராக சம்மன் அனுப்ப இருப்பதாக காவல் துறை தெரிவித்துள்ளனர்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.