“வி” சென்டிமென்ட் உடைந்தது… யாரும் எதிர்பார்க்காத பெரம்பூரை விஜய் தேர்வு செய்தது ஏன்?… பின்னணியில் இருக்கும் ரகசியம்…!!!
SeithiSolai Tamil March 02, 2026 07:48 PM

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய், வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் சென்னை பெரம்பூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாக வெளியாகியுள்ள செய்தி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பூரில் நடைபெற்ற கட்சியின் செயல் வீரர்கள் கூட்டத்தில், விஜய் இத்தொகுதியில் போட்டியிட வேண்டும் என ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இது குறித்துப் பேசிய அக்கட்சியின் தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, பெரம்பூர் தொகுதியில் குறுகிய காலத்தில் 40 ஆயிரம் உறுப்பினர்கள் இணைந்துள்ளதாகவும், மக்கள் மாற்றத்தை விரும்புவதால் இத்தொகுதியைத் தேர்ந்தெடுப்பது சரியாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் திமுகவின் கோட்டையாகக் கருதப்படும் பெரம்பூர் தொகுதியில், தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் அதிக அளவில் வசிக்கின்றனர். ‘வி’ என்ற சென்டிமென்ட் அடிப்படையில் விருகம்பாக்கம் அல்லது விக்கிரவாண்டியில் விஜய் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அடித்தட்டு மக்களின் ஆதரவைப் பெற பெரம்பூரை அவர் தேர்வு செய்யக்கூடும் எனத் தெரிகிறது.

இந்நிலையில் விஜய்யின் வருகையால் இத்தொகுதி ஒரு நட்சத்திரத் தொகுதியாக மாறியுள்ள நிலையில், அவரை எதிர்த்து திமுக சார்பில் தற்போதைய எம்.எல்.ஏ ஆர்.டி.சேகர் அல்லது அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் களம் காணத் தயாராகி வருவதால், தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.