NDA கூட்டணியில் ராமதாஸ்…. அன்புமணி போட்ட மூணு கண்டிஷன்…. ஆடிப்போன பாமக வட்டாரம்….!!
SeithiSolai Tamil March 02, 2026 08:48 PM

தமிழக அரசியலில் தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான மோதல் இப்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், திமுக மற்றும் தவெக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்க முயற்சித்தும் கதவுகள் திறக்கப்படாததால், வேறு வழியின்றி மீண்டும் பாஜக தலைமையிலான என்.டி.ஏ (NDA) கூட்டணிக்கே திரும்ப முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் கசிகின்றன. ஆனால், அங்குதான் ஒரு மிகப்பெரிய ட்விஸ்ட் காத்திருக்கிறது. பாமகவின் தற்போதைய தலைவரான அன்புமணி ராமதாஸ், தனது தந்தை ராமதாஸை கூட்டணியில் சேர்க்க அதிரடியாக மூன்று நிபந்தனைகளை பாஜக மேலிடத்திடம் விதித்துள்ளாராம்.

அந்த மூன்று கண்டிஷன்களும் பாமக வட்டாரத்தையே அதிரவைத்துள்ளன. முதலாவதாக, ராமதாஸ் அணிக்கு ‘மாம்பழம்’ சின்னத்தை விட்டுக்கொடுக்க முடியாது என்றும், இரண்டாவதாகத் தொகுதிப் பங்கீடு தொடர்பாக முதலில் தன்னுடன்தான் பேச்சுவார்த்தை நடத்தி உறுதி செய்ய வேண்டும் என்றும் அன்புமணி கறாராகக் கூறியுள்ளார். எல்லாவற்றிற்கும் மேலாக, “ராமதாஸ் இருக்கும் எந்தவொரு தேர்தல் மேடையிலும் நான் ஏறமாட்டேன்” என்று அவர் கூறியிருப்பதுதான் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான இந்த அதிகாரப் போட்டி, பாமகவின் வாக்கு வங்கியில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற விவாதம் தற்போது சூடுபிடித்துள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.