பும்ரா இல்லனா ஜெயிச்சிருக்க முடியாது…! சஞ்சு மட்டும் அதிரடி காட்டல, சைலன்டா சம்பவம் செஞ்ச பும்ரா… இம்பேக்ட் பிளேயர் விருது… கெத்து காட்டும் இந்திய வீரர்கள்..!
SeithiSolai Tamil March 02, 2026 09:48 PM

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முக்கியமான போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது. சஞ்சு சாம்சனின் அதிரடி ஆட்டம் ஒருபுறம் இருந்தாலும், இம்பாக்ட் பிளேயர் விருது இந்தியாவின் முக்கிய பந்துவீச்சாளரான ஜஸ்பிரித் பும்ராவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணியை 195 ரன்களுக்குள் சுருட்டுவதில் பும்ராவின் பங்கு முக்கியமானது. 12-வது ஓவரில் பும்ரா ஒரே ஓவரில் சிம்ரன் ஹெட்மையர் மற்றும் ரோஸ்டன் சேஸ் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தின் போக்கை மாற்றினார். தனது 4 ஓவர்களில் 36 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றினார்.

https://www.instagram.com/reel/DVYILPCkxst/?igsh=MW9sNjl0NmFpdmlrNA

196 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்தியாவுக்கு, தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் அதிரடி அளித்தார். 50 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் நாட் அவுட் 97 ரன்கள் குவித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். சாம்சனுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

மேலும் விருது பெற்ற பிறகு பேசிய பும்ரா, “19-வது ஓவரில் சிவம் தூபே அடித்த இரண்டு பவுண்டரிகள் மிகவும் முக்கியமானவை. அது அணியின் மீதிருந்த அழுத்தத்தைக் குறைத்தது” என்று கூறினார். இந்திய அணியின் இந்த வெற்றி வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.