NDA, இந்தியா கூட்டணிக்கு செக்..! “ஸ்டாலின் தலைமையில் களமிறங்கும் 3-வது அணி”… இனி டெல்லி அரசியல் சூடு பிடிக்கும்… ராகுலுக்கு பேரிடி..!!!!
SeithiSolai Tamil March 02, 2026 10:48 PM

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையேயான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் வழக்கத்திற்கு மாறான இழுபறி நீடித்து வருகிறது. இது வெறும் பேச்சுவார்த்தை என்ற நிலையைக் கடந்து, இரு தரப்பிற்கும் இடையேயான பனிப்போராக மாறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த முறை காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்ட 25 தொகுதிகள், இந்த முறை சாத்தியமில்லை என திமுக தலைமை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. “ஆட்சியில் பங்கு” மற்றும் அதிக தொகுதிகள் என காங்கிரஸ் பிடிவாதம் பிடிப்பது, திமுகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தேமுதிக, விசிக, இடதுசாரிகள் எனப் பல கட்சிகள் திமுக கூட்டணியில் இணைந்துள்ளன. மேலும், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவும் உள்ளதால், காங்கிரஸை நம்பியிருக்க வேண்டிய அவசியமில்லை என திமுக தலைமை கணக்கிட்டுள்ளதாகத் தெரிகிறது. குறிப்பாக, தேமுதிகவின் வருகை வட மாவட்டங்களில் கூடுதல் பலத்தைத் தரும் என திமுக நம்புகிறது.

தேசிய அளவில் ‘இந்தியா’ கூட்டணியின் முக்கிய அங்கமாக ஸ்டாலின் இருந்தாலும், காங்கிரஸின் பிடிவாதம் காரணமாக மாற்றுத் திட்டத்தையும் அவர் பரிசீலிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோருடன் ஸ்டாலின் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க அல்லாத ஒரு “தேசிய முன்னணி”யை உருவாக்கி, அதற்கு ஸ்டாலினையே தலைமை ஏற்கச் செய்ய இதர மாநிலக் கட்சிகள் அழுத்தம் கொடுத்து வருகின்றன. பிற மாநிலங்களில் காங்கிரஸ் கூட்டணியால் ஏற்பட்ட தோல்விகளை முன்மாதிரியாகக் கொண்டு, தமிழகத்தில் அத்தகைய சூழலைத் தவிர்க்க ஸ்டாலின் விரும்புவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

மேலும் காங்கிரஸ் விட்டுக்கொடுத்து வராவிட்டால் தனித்துப் போட்டியிட்டு பெரும்பான்மையைப் பெறலாம் என்ற கருத்தும் திமுகவினரிடையே நிலவுகிறது. தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தமிழக அரசியலில் மிக விரைவில் பெரிய மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.