போர் பதற்றம்… மெக்காவில் சிக்கிய தமிழக தலைமை காஜி!
Dinamaalai March 02, 2026 10:48 PM

அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் நாடுகளுக்கு இடையே தீவிரமாக நடைபெறும் மோதல் காரணமாக, தமிழக அரசின் தலைமை காஜி என்.பி. உஸ்மான் முஹ்யித்தீன் சௌதி அரேபியாவில் சிக்கியுள்ளார். அவர் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வதற்காக பிப்ரவரி 15ஆம் தேதி சென்னையில் இருந்து மெக்கா சென்றிருந்தார். அங்கு நிலவும் போர் பதற்றம் காரணமாக தாயகத்துக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது மெக்காவில் தங்கியுள்ள அவர், தமிழகத்திற்கு பாதுகாப்பாக திரும்ப உதவி கோரியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து தமிழக அரசு தரப்பில் அவரை தொடர்புகொண்டு பேசியதாக கூறப்படுகிறது. பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விமான சேவை தொடங்கியவுடன் அவரை பாதுகாப்பாக அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

அணு ஆயுத ஒப்பந்தப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதன் பின்னர் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் அதிகரித்துள்ளது. பல்வேறு நாடுகள் குறிவைக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பாதுகாப்பு சூழல் கவலைக்கிடமாக உள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.