Breaking: ஓமனில் எண்ணெய் கப்பல் மீது பயங்கர தாக்குதல்… இந்தியர் பலி… பெரும் பரபரப்பு..!!!
SeithiSolai Tamil March 03, 2026 05:48 AM

ஓமன் கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த எண்ணெய் கப்பல் மீது வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ஆளில்லா படகு (ட்ரோன்) மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில், இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தத் தாக்குதல் சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட ஆளில்லா படகு, எண்ணெய் கப்பல் மீது மோதி வெடிக்கச் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

தாக்குதலுக்கு உள்ளான கப்பலில் 16 இந்தியர்கள் உட்பட மொத்தம் 21 பேர் பணியில் இருந்தனர். அவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாக ஓமன் கடல்சார் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் தற்போது எண்ணெய் கப்பல் மீது திடீரென தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.