சீட் சின்னதா இருக்காம்…. இதுக்கு கண்டக்டர் என்னப்பா பண்ணுவாரு….? பெங்களூரு பஸ்ஸில் நடந்த கலாட்டா….!!
SeithiSolai Tamil March 03, 2026 12:48 PM

பெங்களூரு டூ ஓசூர் பஸ்ஸில் சீட் பத்தவில்லை எனப் பயணி ஒருவர் கண்டக்டரிடம் மல்லுக்கட்டிய வினோதச் சம்பவம் அரங்கேறியுள்ளது. “சீட் ரொம்பச் சின்னதா இருக்கு, இன்னும் பெருசா இருக்கணும்” என அந்தப் பயணி அடம்பிடிக்க, கடுப்பான கண்டக்டர், “நான் என்ன பாடி பில்டிங் செஞ்சு பெரிய வண்டியாவா கொண்டு வர முடியும்? வேணும்னா அதிகாரிகிட்ட கேளுங்க” என எதார்த்தமாகப் பதிலளித்துள்ளார்.

ஆனால், அந்தப் பயணி விடாமல், “கண்டக்டர் நீங்கதான் இதுக்கெல்லாம் பொறுப்பு, உங்க மேலதான் புகார் கொடுக்கப் போறேன்” என வாக்குவாதத்தில் ஈடுபட, பஸ்ஸே பரபரப்பானது. சீட் சைஸுக்காகக் கண்டக்டரை ஓவர் டைம் வேலை வாங்கிய அந்தப் பயணியின் வீடியோ இப்போது சோஷியல் மீடியாவில் சிரிப்பலையை ஏற்படுத்தி வைரலாகி வருகிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.