Sai Abhyankkar: பவழ மல்லி.. கல்யாண வைப்பில் சாய் அபயங்கரின் புது பாடல் புரோமோ இதோ!
TV9 Tamil News March 03, 2026 12:48 PM

இளம் இசையமைப்பாளராக ரசிகர்களை கவர்ந்துவருபவர் சாய் அபயங்கர் (Sai Abhyankkar). இவர் கட்சி சேர (Katchi Sera) என்ற ஆல்பம் பாடலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். கடந்த 2024ம் ஆண்டு தொடக்கத்தில் வெளியான இந்த பாடல் இவருக்கு தென்னிந்திய மக்கள் மத்தியில் எதிர்பாராத வரவேற்பை கொடுத்திருந்தது. இவர் வேறுயாருமில்லை, பிரபல பின்னணி பாடகர் திப்புவின் (Tippu) மகனாவார். கட்சி சேர என்ற பாடலின் மூலம் இவருக்கு வரவேற்பு கிடைத்திருந்த நிலையில், ஆச கூட, சித்தரபுத்திரி மற்றும் விழிவீக்குற போன்ற ஆல்பம் பாடல்களை இசையமைத்து வெளியிட்டிருந்தார். அந்த வகையில் இவர் தற்போது சூர்யா (Suriya) முதல் அல்லு அர்ஜுன் (Allu Arjun) வரை பல உச்சட் நட்சத்திரங்களின் படங்களுக்கும் இசையமைப்பாளராக பணியாற்றிவருகிறார்.

அதிலும் இவரின் இசையமைப்பில் டியூட் (Dude) என்ற படமானது இறுதியாக வெளியான நிலையில், இப்படத்தில் இவரின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்நிலையில் தொடர்ந்து படங்களில் பிசியாக இருந்தவரும் இவர், தற்போது 5வது ஆல்பம் பாடலையும் இசையமைத்துள்ளார். ‘பவழ மல்லி‘ (Pavazhamalli) என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இப்பாடலின்புரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: நீங்கள் இதுவரை பார்த்திராத வகையில்.. விஸ்வநாத் & சன்ஸ் படம் குறித்து வெங்கி அட்லூரி!

சாய் அபயங்கரின் பவழ மல்லி ஆல்பம் பாடலின் புது புரோமோ வீடியோ பதிவு:

https://t.co/5Tcvlcuxvt ♥️♥️♥️💥

— abhyankkar (@SaiAbhyankkar)

சாய் அபயங்கர் இசையமைத்தில் உருவாகியுள்ள 5வது ஆல்பம் பாடல் பவளமல்லி. இதில் சாய் அபயங்கர் மற்றும் கயாடு லோஹர் இருவரும் இணைந்து நடனமாடியுள்ளனர். இப்பாடலானது முழுக்க திருமண வைப்பில் தயாராகியுள்ளது. இந்த பாடலின் புரோமோ வெளியாகி தற்போது வைரலைவரும் நிலையில், வரும் 2026 மார்ச் 5ம் தேதியில் முழு பாடலும் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திரைப்படங்களில் சாய் அபயங்கர்:

இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைப்பில் இதுவரை மொத்தமே இரு படங்கள் வெளியாகியுள்ளது. தமிழில் பிரதீப் ரங்கநாதனின் டியூட் திரைப்படமும் மலையாளத்தில் பல்டி என்ற திரைப்படமும் வெளியாகியிருக்கிறது. இதில் டியூட் படத்தின் பாடல்கள் அனைத்தும் எதிர்பாராத வரவேற்பை பெற்றிருந்தது. மேலும் இவரின் இசையமைப்பில் சூர்யாவின் கருப்பு படமும் தயாராகிவரும் நிலையில், இதன் முதல் பாடல் தற்போதுவரியிலும் ட்ரெண்டில் உள்ளது.

இதையும் படிங்க: சலார் 2 படம் எப்படி இருக்கும்? தயாரிப்பாளர் சொன்ன சூப்பர் அப்டேட்

இவரின் இசையமைப்பில் கருப்பு, மார்ஷல், AA22, டி55, சிவகார்த்திகேயனின் புது படம், விஜய் சேதுபதி மற்றும் தரணீதரனின் கூட்டணி படம் என வரிசையாக கிட்டத்தட்ட 6 முதல் 8 படங்கள் வரை தனது கைவசத்தில் இவர் வைத்துள்ளார். மேலும் புது படங்களுக்கான வாய்ப்புகளும் இவருக்கு கிடைத்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.