பிரபல மராத்திய நடிகை சோனாலி குல்கர்னி, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது திருமண வாழ்க்கை மற்றும் பொருளாதார சுதந்திரம் குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார். வெளிநாட்டில் வேலை பார்க்கும் கணவரைத் திருமணம் செய்துகொண்டால், அவர் நிறையப் பணம் சம்பாதிப்பார் என்பதற்காகவே நடிகைகள் அத்தகைய முடிவை எடுப்பதாக வரும் விமர்சனங்களுக்கு அவர் பதிலடி கொடுத்துள்ளார்.
“எனது கணவரை விட நான்தான் அதிக பணம் சம்பாதிக்கிறேன் என்பதைப் பெருமையுடன் சொல்லிக்கொள்கிறேன்; அவருடைய சம்பளம் எவ்வளவு என்று கூட எனக்குத் தெரியாது” என்று அவர் கூறியுள்ளார்.
தங்கள் குடும்பத்தில் பொருளாதார ரீதியாகத் தங்களுக்குள் எந்தப் போட்டியும் இல்லை என்றும், தனது கணவர் மற்றும் புகுந்த வீட்டினர் மிகவும் முற்போக்கானவர்கள் என்றும் சோனாலி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
தற்போது இருவரும் தனித்தனியாக வங்கி கணக்குகளைப் பராமரித்து வருவதாகவும், ஒருவேளை தான் எதிர்காலத்தில் வேலையைக் குறைத்துக்கொண்டால் அப்போது கணவர் குடும்பத்தைக் கவனிப்பார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சோனாலி நடித்துள்ள ‘திகி’ என்ற திரைப்படம் வரும் மார்ச் 6, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.