IISER IAT 2026:அறிவியல் கனவை நனவாக்க பொன்னான வாய்ப்பு! ஐசர் தேர்வு எப்போது? விண்ணப்பிப்பது எப்படி?
க.சே.ரமணி பிரபா தேவி March 03, 2026 08:14 PM

இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகங்கள் (IISERs), 2026–27 கல்வியாண்டிற்கான அனைத்து IISER வளாகங்களிலும் இளங்கலைப் பட்டப் படிப்புகளில் சேர, பிரத்யேக மற்றும் கட்டாய நுழைவுத் தேர்வான IISER அறிவிப்பு வெளியாகி உள்ளது.

2026ம் ஆண்டின் IISER திறனறித் தேர்வுக்கான (IAT) விண்ணப்பங்களை வரவேற்கின்றன. ஏழு IISER வளாகங்களில் உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சிப் பயிற்சிக்கான வாய்ப்பினை அளிக்கும் இந்த முக்கிய திறனறித் தேர்வில் பங்கேற்க ஆர்வமுள்ள அறிவியல் மாணவர்கள் இப்போது பதிவு செய்யலாம். IISERகள் என்பது உயர்தரமான அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் இந்திய அரசால் நிறுவப்பட்ட முதன்மை தன்னாட்சி நிறுவனங்கள் ஆகும்.

IISER பெர்ஹாம்பூர், IISER போபால், IISER கொல்கத்தா, IISER மொஹாலி, IISER புனே,IISER திருவனந்தபுரம் மற்றும் IISER திருப்பதி உள்ளிட்ட IISER கழகங்களில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள், https://www.iiseradmission.in/ என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று IAT 2026 தேர்வுக்கு பதிவு செய்யலாம். இந்த வலைத்தளத்தில் தேர்வு மையங்கள் பற்றிய விவரங்களை பெறலாம்.

IISER திறனறித் தேர்வு (IAT) அறிவியல் சார்ந்த ஒரு பிரத்யேக தொழில் மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்குகிறது. இதன் மூலம் மாணவர்கள் தங்கள் திறமைக்கேற்ற வேலையை தேர்ந்தெடுக்கும் முன், பல துறைகளை ஆராய்ந்து முடிவெடுக்கலாம். வெற்றி பெறும் விண்ணப்பதாரர்கள் உயிரியல், வேதியியல், கணிதம், இயற்பியல் மற்றும் புவி அறிவியல் துறைகளில் அதிநவீன ஆராய்ச்சியில் ஈடுபடும் குழுவுடன் இணையலாம்.

IISER கழகங்கள் வழங்கும் ஆராய்ச்சிக்கான வாய்ப்புகள், கருத்தியல் பயிற்சி, உயர் படிப்புகள் (MS/PhD) மற்றும் பல்துறை சார்ந்த விஷயங்களில் அதிக நெகிழ்வுத்தன்மைன்ஆகியவற்றின் மூலம் மாணவர்கள் பலன் பெறுவதுடன், துறை சார்ந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, கல்வி, ஆழமான தொழில்நுட்பம் மற்றும் அறிவியல்கண்டுபிடிப்புகள் ஆகியவற்றையும் அறிந்து கொள்ளலாம்.

12ம் வகுப்பு/ அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது அறிவியல் பிரிவில் குறைந்தபட்சம் 3 ஆண்டு டிப்ளமோ படிப்பில் (2024, 2025 அல்லது 2026ம் ஆண்டு) அனைத்து பாடங்களிலும் கூட்டாக குறைந்தபட்சம் 60% மதிப்பெண்கள் (SC/ST/PWD பிரிவினர் 55%) பெற்று தேர்ச்சி பெற்றவர்கள், 2026ம் ஆண்டின் IISER திறனறித் தேர்வுக்கு (IAT) விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.

உயிரியல், வேதியியல், கணிதம் மற்றும் இயற்பியல் ஆகிய மூன்று பாடங்களில் குறைந்தது மூன்று பாடங்களைப் படித்திருக்க வேண்டும்; IISER கொல்கத்தாவில் BS-MS கணக்கீடு மற்றும் தரவு அறிவியல், IISER போபாலில் B.Tech./ BS பொருளாதார அறிவியல், IISER திருப்பதியில் BS பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் அறிவியல் போன்ற குறிப்பிட்ட படிப்புகளுக்கு கணிதம் கட்டாயம் படித்திருக்க வேண்டும்.

  • IISER சேர்க்கை 2026 வலைத்தளத்திற்கு செல்லவும்: https://iiseradmission.in/
  • முகப்புப் பக்கத்தில், ‘Apply for IAT-2026’ என்பதற்குச் செல்லவும்
  • அடுத்த பக்கத்தில், பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல்லைப் பெற பதிவு செய்யவும்
  • வெற்றிகரமான பதிவுக்குப் பிறகு, தேவையான ஆவணங்களைப் பதிவேற்றி, உங்களுக்கான கட்டணத்தைச் செலுத்துவதன் மூலம் விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்.
  • விண்ணப்பப் படிவம் சமர்ப்பிக்கப்பட்டவுடன் சில விவரங்களை மாற்ற முடியாது என்பதால், விண்ணப்பதாரர்கள் அனைத்து விவரங்களையும் கவனத்துடன் சரியாக வழங்க வேண்டும்.

IAT 2026 சேர்க்கை செயல்முறை தொடர்பான சந்தேகங்களுக்கு

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.