துபாயில் சிக்கிய பி.வி.சிந்து பத்திரமாக நாடு திரும்பினார்!
Top Tamil News March 03, 2026 08:48 PM

.அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையேயான ராணுவத் தாக்குதல்கள் தொடங்கியதையடுத்து மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் அசாதாரண சூழல் நிலவியது. அபுதாபி, துபாய், தோஹா, ரியாத் ஆகிய நகரங்களில் ஈரான் வான்வழி தாக்குதல் நடத்தியது. இங்கிலாந்தின் பர்மிங்கமில் பேட்மின்டன் போட்டியில் பங்கேற்க விமானத்தில் பயணித்த பி.வி.சிந்து துபாயில் சிக்கினார்.

பின்னர் அவர் மற்றும் அவரது குழுவினர் துபாய் விமான நிலையத்திற்கு அருகே ஹோட்டலில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர். தற்போது பி.வி.சிந்து, தன் குழுவினருடன் பத்திரமாக நாடு திரும்பியுள்ளார். பெங்களூரு விமான நிலையத்திற்கு பத்திரமாக அவர் வந்து இறங்கினார். சமூக வலைதளத்தில் பிவி சிந்து வெளியிட்ட பதிவில், ''கடந்த சில தினங்களாக இருந்த அசாதாரண சூழலில் இருந்து மீண்டு நாடு திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது. கடினமான சூழலிலும் துபாய் விமான நிலையத்தில் எங்களின் பாதுகாப்பை உறுதி செய்த ஒவ்வொருவருக்கும் நன்றி'' என பதிவிட்டுள்ளார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.