தெலுங்கு சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் நடிகர் அல்லு அர்ஜுன் (Allu Arjun). இவரின் நடிப்பில் தெலுங்கு மொழியில் தொடர்ந்து மிக பிரம்மாண்டமான திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. அந்த வகையில் இறுதியாக இவரின் நடிப்பில் வெளியான திரைப்படம் புஷ்பா 2 (Pushpa 2). இது கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் வெளியாகியிருந்த நிலையில், பான் இந்திய அளவிற்கு பிரம்மாண்ட வரவேற்பை பெற்றிருந்து. இப்படமானது ரூ 2000 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தை அடுத்தக்க தற்போது தமிழ் இயக்குநர் அட்லீ (Atlee) இயக்கத்தில் AA22xA6 என்ற படத்தில் அட்லீ நடித்துவருகிறார். இப்படத்தில் அவர் 3 வேடத்தில் நடிப்பதாக கூறப்படும் நிலையில், அவருக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோன் (Deepika Padukone) நடித்துவருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்புகளானது மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கி கிட்டத்தட்ட 1 ஆண்டு ஆகியுள்ள நிலையில், இதன் டைட்டில் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். மேலும் சமீபத்தில் அட்லீ, அல்லு அர்ஜுனின் சகோதரன் திருமண வரவேற்ப்பில் கலந்துகொண்டார். இதன் வீடியோவும் இணையத்தில் வைரலாகிவருகிறது. அந்த வகையில் இப்படத்தின் டைட்டில் வரும் 2026 ஏப்ரல் 08ம் தேதி, அல்லு அர்ஜுனின் பிறந்தநாளில் வெளியாகும் என தகவல்.
இதையும் படிங்க: தனுஷ் ஒரு ஸ்டார் பெர்ஃபார்’.. புகழ்ந்து பேசிய நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு!
அட்லீ மற்றும் அல்லு அர்ஜுனின் படத்தில் நடிக்கும் நடிகர்கள் லிஸ்ட்:#AA22xA6 – The biggest title and teaser reveal happening on April 8th🤯#AlluArjun x #Atlee pic.twitter.com/NcGJ6SP3cY
— ItsVishhnu (@ItsVishhnu)
இந்த AA22xA6 திரைப்படமானது கிட்டத்தட்ட ரூ 800 கோடிகளுக்கு மேல் பொருட்செலவில் தயாராகிவருகிறதாம். இதை அட்லீ இயக்கும் நிலையில், தமிழ் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்துவருகிறது. இப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் இசையமைத்துவருகிறார். இதுதான் இவர் இசையமைக்கும் முதல் பான் இந்திய பிரம்மாண்ட திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் அல்லு அர்ஜூனுடன் தீபிகா படுகோன் நடிப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: ஓடிடி ரிலீஸ் தேதியை லாக் செய்தது வித் லவ் படக்குழு… வைரலாகும் பதிவு
மேலும் இவர்களுடன் நடிகைகள் மிருணாள் தாக்கூர், ராஷ்மிகா மந்தனா, ஜான்வி கபூர், ரம்யா கிருஷ்ணன் மற்றும் நடிகர் யோகி பாபு உள்ளிட்ட பிரபலங்கள் இணைந்து நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த் படத்தில் அல்லு அர்ஜுன் கிட்டத்தட்ட 3 வேடத்தில் நடிப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இந்த படத்தை வரும் 2027ம் ஆண்டில் வெளியிட படக்குழு திட்டமிட்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் 2027ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுவருகிறதாம்.