இன்று வானில் 'ரத்த நிலா' ... சந்திர கிரகணம் தொடக்கம்!
Dinamaalai March 03, 2026 08:48 PM

 

‘ரத்த நிலா’ என அழைக்கப்படும் இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று பிற்பகல் 3.20 மணிக்கு தொடங்கியது. சூரிய ஒளி சந்திரன் மீது விழும் விதம் காரணமாக அது சிவப்பு நிறத்தில் தோன்றும். அருணாச்சலப் பிரதேசம், அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் இந்த காட்சி முழுமையாக தென்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு, மும்பை, டெல்லி போன்ற நகரங்களில் மாலை 6.20 மணி முதல் கிரகணத்தை காணலாம். இந்த கிரகணம் மொத்தம் 58 நிமிடங்கள் நீடிக்கும். பல பகுதிகளில் மக்கள் ஆர்வத்துடன் வானத்தை நோக்கி காத்திருக்கின்றனர்.

சென்னையில் முழு கிரகணத்தின் இறுதிப் பகுதியை சுமார் 31 நிமிடங்கள் காண முடியும். மாலை 6.17 மணி முதல் 6.48 மணி வரை இந்த அற்புத காட்சியை ரசிக்கலாம். கன்னியாகுமரி உள்ளிட்ட தென் தமிழகப் பகுதிகளிலும் இதே நேரம் வரை பார்க்க வாய்ப்பு உள்ளது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம், சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பாதுகாப்பாக பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.