Getty Images புதன்கிழமை அதிகாலை நியூசிலாந்தில் தென்பட்ட சந்திர கிரகணம்.
உலகின் பல்வேறு பகுதிகளில் முழு சந்திர கிரகணம் இன்று (மார்ச் 3) நிகழ்கிறது. ஆசியா, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவின் சில பகுதிகளில் முழு நிலவு மிகவும் அரிதான முழு சந்திர கிரகணத்துடன் இணைந்து வருகிறது. இந்த நேரத்தில் நிலவு சிவப்பு நிறத்தில் தோன்றும்.
முழு நிலவுக்கு நவீன நாட்காட்டிகள் பயன்படுத்தப்படுவதற்கு முன்பான பண்டைய பாரம்பரியத்துடன் தொடர்புடைய பெயர்கள் உள்ளன. மாறி வரும் பருவத்தைக் குறிப்பதற்கு அவை பயன்பட்டன.
மார்ச் மாதத்தில் வரும் முழு நிலவு 'வார்ம் மூன்' (worm moon) என்று அழைக்கப்படுகிறது. இளவேனிற்காலத்தில் வானிலை வெப்பமடைவதால் மண்புழுக்கள் மண்ணிலிருந்து வெளியே வருவதை அது குறிக்கிறது.
உலகின் சில பகுதிகளில் முழு சந்திர கிரகணம் ஏற்பட்டதால் முழு நிலவு தென்பட்டது. இது ப்ளட் மூன் (Blood Moon) என்று அழைக்கப்படுகிறது. சூரியன் மற்றும் நிலவுக்கு இடையே பூமி வருகிறபோது முழு சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இதனால் நிலவின் மேற்பரப்பில் நிழல் விழுகிறது.
முழு சந்திர கிரகணத்தின்போது நிலவு சிவப்பு நிறமாக மாறுகிறது. ஏனெனில், பூமியின் வளிமண்டலம் சூரிய ஒளியை வளைத்து சிவப்பு அலைகளை மட்டுமே அனுமதித்து ஒளியூட்டுகிறது.
BBC Weather Watchers / A Figment of your Imagination பிரிட்டனின் வடக்கு டைன்சைடில் உள்ள டைன்மவுத்தில் அடர்மஞ்சள் நிறத்தில் தென்பட்ட வார்ம் மூன்.
PA Media பிரிட்டனின் சண்டர்லாந்தில் உள்ள பென்ஷா நினைவுச் சின்னத்தின் வலது பக்கத்தில் வார்ம் மூன் தென்பட்டது.
Getty Images நியூசிலாந்தில் முழு சந்திர கிரகணத்தின்போது நிலவு சிவப்பு நிறத்தில் தோற்றமளித்த காட்சி.
Getty Images அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள சார் ரஃபேலின் வடக்குப் பகுதியில் தென்பட்ட முழு சந்திர கிரகணம்.
Getty Images கனடாவின் டொரண்டோவில் தென்பட்ட முழு சந்திர கிரகணம்.
Getty Images பனாமா நகரத்தின் மீது முழு சந்திர கிரகணத்தின்போது தோன்றிய முழு நிலவு
Getty Images இந்தியாவின் அசாமில் உள்ள கோலாகாட்டின் தென்பட்ட முழு சந்திர கிரகணம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு