“2026 தான் போச்சு…. 2027ல் கலந்துக்கணும்” உலகக்கோப்பை கனவு சிதையுமா….? பயப்பட வேணாம்…. நேரா வாங்க – பாகிஸ்தானுக்கு ரூட் போட்ட வங்கதேசம்….!!
SeithiSolai Tamil March 04, 2026 09:48 AM

பாகிஸ்தான் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடுவதில் சிக்கல் இருப்பதாக வெளியான தகவல்களை வங்கதேச கிரிக்கெட் வாரியம் (BCB) திட்டவட்டமாக மறுத்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றமான சூழலால் இந்தப் போட்டித் தொடர் ரத்தாக வாய்ப்புள்ளதாக ஊடகங்களில் செய்திகள் பரவின. ஆனால், பாகிஸ்தான் தரப்பிலிருந்து இதுவரை தங்களுக்கு அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலும் வரவில்லை என்றும், திட்டமிட்டபடி போட்டிகள் நடைபெறும் என்றும் வங்கதேச அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

குறிப்பாக, பாகிஸ்தானிலிருந்து டாக்காவுக்கு நேரடி விமான வசதிகள் இருப்பதால், துபாய் வழியாகப் பயணம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை, எனவே பாதுகாப்பு ரீதியாக எந்தப் பாதிப்பும் இருக்காது என்று அவர்கள் கூறியுள்ளனர்.2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பைத் தொடருக்கு நேரடியாகத் தகுதி பெறுவதற்கு வங்கதேச அணிக்கு இந்த ஒருநாள் தொடர் மிகவும் முக்கியமானதாகும். ஏற்கனவே கடந்த டி20 உலகக் கோப்பையை வங்கதேச அணி புறக்கணித்ததால் பெரும் பின்னடைவைச் சந்தித்தது.

தற்போது ஐசிசி தரவரிசையில் 10-வது இடத்தில் இருக்கும் வங்கதேசம், ஜிம்பாப்வே போன்ற அணிகளிடம் தனது இடத்தை இழக்க விரும்பவில்லை. எனவே, வரும் மார்ச் 9-ஆம் தேதி பாகிஸ்தான் அணி வங்கதேசம் வருகை தருவதையும், மார்ச் 11-ல் தொடங்கும் ஒருநாள் போட்டிகளையும் வங்கதேச ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வாரியம் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.