தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பற்றி விமர்சனம் செய்த திமுக நிர்வாகியான திவ்யா சத்யாராஜூக்கு, அவரது சகோதரர் சிபிராஜ் பதிலடி கொடுக்கும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் முதல்முறையாக களம் கண்டுள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜயை பற்றி ஏகப்பட்ட விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. குறிப்பாக சமீபத்தில் அவர் மனைவி சங்கீதா விவகாரத்து கேட்டு வழக்கு தொடர்ந்ததாக மனு ஒன்று வெளியானது. அதில் நடிகை ஒருவருடன் தன் கணவர் தொடர்பு வைத்திருந்தாகவும் குறிப்பிட்டது பெரும் சர்ச்சைகளை கிளப்பியது. பலரும் விஜயை தாறுமாறாக விமர்சித்தனர். அதேசமயம் இது திட்டமிட்ட அரசியல் சதி, விஜய் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த செய்யப்படுவதாக பலரும் விமர்சித்தனர்.
ஒரு வீடியோவில் பேசிய திவ்யா சத்யராஜ், “விஜய்யின் தனிப்பட்ட விஷயம் பற்றி பேசுவது சரியானது கிடையாது. நான் அதை என்றைக்கும் பண்ண மாட்டேன். இரண்டு விஷயம் நான் விஜயிடம் கேட்க வேண்டும். ஒன்று நீங்கள் அரசியலுக்கு வரும் முன் மக்களுக்கு என்ன பண்ணிருக்கீங்க என ஒரு லிஸ்டை வெளிப்படையாக கொடுக்க வேண்டும். அதே கேள்வியை அரசியலில் இருக்கும் என்னைப் பார்த்து கேட்கலாம். நான் அரசியலுக்கு வருவதற்கு முன் என்னுடைய சொந்த பணத்தில், எங்க அம்மா பெயரில் ஒரு தொண்டு நிறுவனம் ஆரம்பித்தேன். அதன் மூலம் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள மக்களுக்கு இலவசமாக ஊட்டச்சத்து நிறைந்த உணவு, வைட்டமின் மாத்திரைகள், இரும்புச்சத்து மாத்திரைகள் கொடுத்திட்டு இருந்தேன்.
இன்னொரு விஷயம் பெரியாரை கொள்கை தலைவராக வைத்துக் கொண்டு பெண்களை உங்கள் கட்சியில் இருப்பவர்கள் ரொம்ப தப்பா பேசுறாங்க. இதை என்றும் சகித்துக் கொள்ள முடியாது என தெரிவித்திருந்தார். இதற்கு தவெக தொண்டர்களும், விஜய் ரசிகர்களும் கடுமையாக திவ்யாவை கண்டித்தனர்.
Sibi Sathyaraj slipper shot reply to her sis in Insta story 🙏🫂💪#TVKForTN@TVKVijayHQ https://t.co/uRDF80afVr pic.twitter.com/5a35tD2sNv
— Jai (@leo0000123123) March 3, 2026
இந்நிலையில் நடிகர் சத்யராஜின் மகனும், திவ்யாவின் சகோதரருமான சிபிராஜ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை வைத்துள்ளார். விஜயின் தீவிர ரசிகரான இவர், சத்யராஜ் நடித்த அமைதிப்படை படத்தில் இடம் பெற்ற “மணியா வரலாறை தெரிஞ்சுக்க” என வசனத்தை வைத்து விட்டு விஜய் இதுவரை என்னென்ன உதவிகள் செய்துள்ளார், இயற்கை பேரிடர்களுக்கு எவ்வளவு நிதி வழங்கியுள்ளார் என்பது தொடர்பான வீடியோவை பகிர்ந்து பதிலடி கொடுத்துள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் அப்பாவும், மகளும் திமுக ஆதரவாக பேசினால், பதிலடி கொடுக்க தவெக சார்பில் சிபிராஜ் போதும் என புகழ்ந்து வருகின்றனர்.