ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதலில் சவுதி அரேபியாவின் மிக முக்கியமான 'ராஸ் தனுரா' எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் பலத்த சேதமடைந்துள்ளது.
வான்டர் செயற்கைக்கோள் நிறுவனம் வெளியிட்டுள்ள சமீபத்திய புகைப்படங்கள், இந்த மையத்தில் ஏற்பட்டுள்ள உள்கட்டமைப்பு பாதிப்புகள், தீக்காயங்கள் மற்றும் மோதல் மண்டலங்களை உறுதிப்படுத்தியுள்ளன.
உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி முனையங்களில் ஒன்றான இது, நாளொன்றுக்கு 5,55,000 பேரல்களுக்கும் அதிகமான கச்சா எண்ணெயை சுத்திகரிக்கும் திறன் கொண்டது.
மார்ச் 2 அன்று நடந்த இந்த தாக்குதலால் ஏற்பட்ட பெரும் தீ விபத்தை அடுத்து, இந்த ஆலை தற்போது பகுதியளவு மூடப்பட்டுள்ளது. உலக எரிசக்தி சந்தையின் இதயமாகக்கருதப்படும் இந்த முனையம் முடங்கியுள்ளதால், கச்சா எண்ணெய் விலையில் கடும் ஏற்றம் ஏற்படும் என அஞ்சப்படுகிறது.