|श्री:| |ஸ்ரீ:|
ஸ்ரீராமஜயம்
श्री:श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
பஞ்சாங்கம் | 04.3.2026 | புதன்கிழமை
மாசி~ 20 { 04.3.2026 } புதன் கிழமை**
வருடம் ~ விச்வாவஸு வருடம் {விச்வாவஸு நாம சம்வத்ஸரம்}
அயனம் ~ உத்தராயணம்
ருது ~ சிசிர ருது.
மாதம் ~ மாசி மாதம் { கும்ப மாஸம்}
பக்ஷம் ~ க்ருஷ்ண பக்ஷம்.
திதி ~ 5.43 pm வரை ப்ரதமை பின் த்விதியை
நாள் ~ புதன் கிழமை {சௌம்ய வாஸரம்}
நக்ஷத்திரம் ~ 8 26 am வரை பூரம் பின் உத்திரம்
யோகம் ~ த்ருதி
கரணம் ~ கௌளவம்
அமிர்தாதியோகம் ~ சுபயோகம்
நல்லநேரம் ~ காலை 9.00 ~ 10.00 & மாலை 2.00 ~ 3.00.
ராகுகாலம் ~ மதியம் 12.00 ~ 1.30.
எமகண்டம் ~ காலை 7.30 ~ 9.00.
குளிகை ~ காலை 10.30 ~ மதியம் 12.00.
நல்ல நேரம் ~ 9.00to 10.30am and 2.00to3.00pm
சூரியஉதயம் ~ காலை 6.31
சந்திராஷ்டமம் ~ 2 36 pm வரை மகரம் பின் கும்பம்
சூலம் ~ வடக்கு.
பரிகாரம் ~ பால்
ஸ்ராத்ததிதி ~ பௌர்ணமி ப்ரதமை
இன்று ~
!!स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु ॥
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
!!ॐ सर्वे भवन्तु सुखिनः। सर्वे सन्तु निरामयाः।
सर्वे भद्राणि पश्यन्तु। मा कश्चित् दुःख भाग्भवेत्!!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
ஹோரை புதன்கிழமை
காலை
6-7.புதன். சுபம்
7-8.சந்திரன்.சுபம்
8-9. சனி.. அசுபம்
9-10.குரு. சுபம்
10-11. செவ்வா.அசுபம்
11-12. சூரியன்.அசுபம்
பிற்பகல்
12-1. சுக்கிரன்.சுபம்
1-2. புதன். சுபம்
2-3. சந்திரன்.சுபம்
மாலை
3-4. சனி..அசுபம்
4-5. குரு. சுபம்
5-6. செவ்வா.அசுபம்
6-7. சூரியன். அசுபம்
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.
thiruvalluvar deivapulavar
இன்றைய (04-3-2026) ராசிபலன்கள்
மேஷம்கலை துறைகளில் ஈடுபாடுகள் ஏற்படும். மனதில் புதிய நம்பிக்கையுடன் புதிய முடிவுகளை எடுப்பீர்கள். பிள்ளைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். பிரச்சனைகளில் தெளிவான முடிவுகள் கிடைக்கும். பணிகளில் மறைமுக எதிர்ப்புகளை முறியடிப்பீர்கள். மருத்துவம் சார்ந்த விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். வியாபார போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். ஊக்கம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிகப்பு நிறம்
அஸ்வினி : ஈடுபாடுகள் ஏற்படும்.
பரணி : முடிவுகள் கிடைக்கும்.
கிருத்திகை : வெற்றிகரமான நாள்.
புதுவித பயணங்கள் மூலம் மனதில் தெளிவுகள் ஏற்படும். உறவினர்கள் இடத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும். புதிய நபர்களால் நெருக்கடியான சூழ்நிலைகள் உருவாகும். பொழுது போக்கு சார்ந்த செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும். மனதிற்கு பிடித்த பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். லாபத்தை மேம்படுத்தும் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மெரூண் நிறம்
கிருத்திகை : தெளிவுகள் ஏற்படும்.
ரோகிணி : நெருக்கடியான நாள்.
மிருகசீரிஷம் : சூட்சுமங்களை அறிவீர்கள்.
அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் வருகையால் சில நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். வியாபார பணிகளில் வரவுகள் மேம்படும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். பயணம் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கல்விப் பணிகளில் சாதகமான சூழல் அமையும். உதவிகள் கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்
மிருகசீரிஷம் : உதவிகள் கிடைக்கும்.
திருவாதிரை : வரவுகள் மேம்படும்.
புனர்பூசம் : சாதகமான நாள்.
மனதில் நினைத்த நீண்ட கால விருப்பங்கள் நிறைவேறும். அக்கம் பக்கம் இருப்பவர்களின் ஆதரவுகள் மேம்படும். முயற்சிக்கு உண்டான மாற்றங்கள் ஏற்படும். உயர் அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும். எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். ஓய்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெண்மை நிறம்
புனர்பூசம் : விருப்பங்கள் நிறைவேறும்.
பூசம் : அனுகூலம் உண்டாகும்.
ஆயில்யம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். மறதி தொடர்பான பிரச்சனைகள் குறையும். கணிதம் தொடர்பான துறைகளில் ஆர்வம் அதிகரிக்கும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். பெருந்தன்மையான செயல்பாடுகள் மூலம் பலரின் நம்பிக்கைகளை பெறுவீர்கள். மறதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம்
மகம் : அறிமுகம் கிடைக்கும்.
பூரம் : ஆர்வம் அதிகரிக்கும்.
உத்திரம் : நம்பிக்கை மேம்படும்.
நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். செயல்களில் ஆர்வமின்மை ஏற்படும். உங்கள் மீதான சில விமர்சனங்கள் மறையும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் மனதில் உருவாகும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். உடல் தோற்றப்பொலிவில் மாற்றங்கள் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திரம் : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
அஸ்தம் : பக்குவம் பிறக்கும்.
சித்திரை : மாற்றங்கள் உண்டாகும்.
சுப காரிய பேச்சு வார்த்தைகளில் பொறுமை வேண்டும். புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் உண்டாகும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். வேலையாட்கள் மத்தியில் மதிப்புகள் ஏற்படும். பதற்றமான சூழல்கள் மறையும். பள்ளிப் பருவ நண்பர்களின் சந்திப்புகள் ஏற்படும். இன்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
சித்திரை : பொறுமை வேண்டும்.
சுவாதி : மதிப்புகள் ஏற்படும்.
விசாகம் : சந்திப்புகள் ஏற்படும்.
மூத்த உடன்பிறப்புகள் சாதகமாக செயல்படுவார்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நெருக்கமானவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். சபை நிமித்தமான பணிகளில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். புதிய இலக்குகளை நிர்ணயம் செய்து அதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு புகழ் அதிகரிக்கும். கோபம் குறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
விசாகம் : சாதகமான நாள்.
அனுஷம் : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
கேட்டை : செல்வாக்கு மேம்படும்.
உறவினர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். மனதில் புதுவிதமான தேடல்கள் உண்டாகும். கல்வி பணிகளில் இருந்த இழுபறிகள் மறையும். தர்ம செயல்களில் ஈடுபாடுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். அரசு சார்ந்த உதவிகள் சாதகமாகும். கலை சார்ந்த பணிகளில் அனுபவம் ஏற்படும். வியாபார போட்டிகளை சமாளிப்பீர்கள். சஞ்சலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம்
மூலம் : அனுசரித்து செல்லவும்.
பூராடம் : ஈடுபாடுகள் உண்டாகும்.
உத்திராடம் : அனுபவம் மேம்படும்.
புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். விவேகமான செயல்பாடுகள் மதிப்பை மேம்படுத்தும். எதிலும் அறிவுபூர்வமாக செயல்படுவீர்கள். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். மனதளவில் புதிய தெளிவுகள் பிறக்கும். தடைப்பட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். அலுவலகத்தில் அமைதியான சூழல் உண்டாகும். எதிர்பார்த்த நிதி உதவிகள் கிடைக்கும். தடைகள் மறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை நிறம்
உத்திராடம் : மதிப்புகள் மேமடும்.
திருவோணம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
அவிட்டம் : உதவிகள் கிடைக்கும்.
புதிய நபர்களால் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்க்கவும். திட்டமிட்ட காரியங்களில் அலைச்சல் மேம்படும். வேகத்தை விட அமைதியை கடைபிடிக்கவும். வியாபார பணிகளில் போட்டிகள் உண்டாகும். விவேகத்துடன் செயல்படுவது நன்மதிப்பை உருவாக்கும். மற்றவர்களின் செயல்களில் தலையிடுவதை தவிர்க்கவும். திருப்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அவிட்டம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
சதயம் : அலைச்சல் மேம்படும்.
பூரட்டாதி : மதிப்புகள் மேம்படும்.
தம்பதிகளுக்கிடையே இருந்துவந்த மனவருத்தங்கள் குறையும். மாமனார் வழியில் ஆதரவான சூழல் ஏற்படும். கூட்டாளிகள் மூலம் ஒத்துழைப்புகள் மேம்படும். வாகனப் பழுதுகளை சீர் செய்வீர்கள். உறவினர்கள் வழியில் புரிதல்கள் மேம்படும். தேவைகளை அறிந்து பூர்த்தி செய்து கொள்வீர்கள். அரசு பணிகளில் ஆதாயம் உண்டாகும். ஆசைகள் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
பூரட்டாதி : வருத்தங்கள் குறையும்.
உத்திரட்டாதி : ஒத்துழைப்புகள் மேம்படும்.
ரேவதி : ஆதாயகரமான நாள்.
thiruvalluvar
தினம் ஒரு திருக்குறள்
அதிகாரம்: அருளுடைமை குறள் எண்: 246
பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்தொழுகு வார்.
மு.வ உரை:
அருள் இல்லாதவராய் அறமல்லாதவைகளைச் செய்து நடப்பவர்களை, உறுதிப்பொருளாகிய அறத்திலிருந்து நீங்கித் தம் வாழ்க்கையின் குறிக்கோளை மறந்தவர் என்பார்.
ராஜா பர்த்ரு ஹரியின் சுபாஷிதம்
மாதா சமம் நாஸ்தி சரீர போஷணம்
சிந்தா சமம் நாஸ்தி சரீர சோஷணம்
பார்யா சமம் நாஸ்தி சரீர தோஷணம்
வித்யா சமம் நாஸ்தி சரீர பூஷணம்
ஒரு மனிதனுக்கு தாயைப் போல் சரீரத்தைப் போஷிக்கச் செய்பவர் யாருமில்லை
கவலையைப் போல் சரீரத்தை துன்புறுத்துவது எதுவுமில்லை.
மனைவியைப் போல் சரீரத்தை சுகப்படுத்துபவர் எவருமில்லை.
கல்வியைப் போல் சரீரத்தை அலங்கரிக்கும் பூஷணம் எதுவுமில்லை.
தினசரி. காம்
தினம் ஒரு திருமுறைமறை – 1. பதிகம் – 44 பாடல் – 7
பொங்கிளநாகமொ ரேகவடத்தோ டாமைவெண் ணூல்புனைகொன்றை
கொங்கிளமாலை புனைந்தழகாய குழகர்கொ லாமிவரென்ன
அங்கிளமங்கையோர் பங்கினர்பாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
சங்கொளிவண்ணரோ தாழ்குழல்வாடச் சதிர்செய்வதோ விவர்சார்வே.
விளக்கவுரை :
சினம் பொங்கும் இளநாகத்தைப் பூண்டு, ஒற்றையாடை அணிந்து, ஆமை ஓட்டையும், வெண்மையான பூணூலையும் அணிந்து, தேன்நிறைந்த புதிய கொன்றை மலர்மாலை அணிந்த அழகிய இளைஞர் இவர் என்று சொல்லும்படி இளநங்கையான உமையம்மையை ஒருபாகமாக உடைய திருப்பாச்சிலாச்சிராமத்து உறையும் சங்கொளி போல நீறு அணிந்த திருமேனியை உடைய இறைவரோ இத்தாழ்குழலாள் வருந்தச் சாமர்த்தியமான செயல் செய்வது. இது இவர் பெருமைக்குப் பொருத்தப்படுவதோ?
இன்றைய சிந்தனைக்கு…பயன்படுத்தாத திறமை, தன் ஆற்றலை இழந்து கொண்டே இருக்கும், உனக்குள் இருக்கும் திறமையை, பயன்படுத்து!
உன்னால் முடிந்ததை, சிறப்பாக செய்தால், அது திறமை, முடியாததை சிறப்பாக செய்தால், அதுவே தன்னம்பிக்கை!!
விழுந்த இலைகளுக்காக, எந்த மரமும், விழுந்து, விழுந்து அழுவதில்லை, புதிய தளிர்களை தந்து, மீண்டும், மீண்டும், தன்னம்பிக்கையோடு தலையாட்டும்!!!
பஞ்சாங்கம் – மார்ச் 04 – புதன் | இன்றைய ராசி பலன்கள்! News First Appeared in Dhinasari Tamil