திமுக, அதிமுக-வை கலங்கடிக்கும் தவெக.. மார்ச் 8-ல் அதிரடி காட்டப்போகும் விஜய்.. தேர்தல் அறிக்கையில் ஒளிந்திருக்கும் அந்த 3 ரகசியங்கள்.. !!
SeithiSolai Tamil March 04, 2026 02:48 PM

தமிழக சட்டமன்றத் தேர்தலை முதன்முறையாகச் சந்திக்கத் தயாராகி வரும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக), தனது தேர்தல் அறிக்கையை மகளிர் தினமான மார்ச் 8-ம் தேதி வெளியிடத் திட்டமிட்டுள்ளது. இதற்காக அக்கட்சியின் கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் தலைமையிலான குழு, தமிழகம் முழுவதும் ஐந்து மண்டலங்களில் பொதுமக்களிடம் நேரில் கருத்துகளைக் கேட்டறிந்தது.

மேலும், இணையதளம் வாயிலாகவும் பெறப்பட்ட மக்களின் கோரிக்கைகள் மற்றும் ஆலோசனைகளைத் தொகுத்து முழுமையான தேர்தல் அறிக்கையைத் தவெக தலைவர் விஜய் தயார் செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் தேர்தல் அறிக்கையில் பெண்கள், விவசாயிகள், மீனவர்கள் மற்றும் தொழிலாளர்களின் நலன்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தலை முன்னிட்டு விஜய் ஏற்கனவே மாவட்ட வாரியாக நிர்வாகிகளைச் சந்தித்து வரும் நிலையில், மகளிர் தினத்தில் வெளியாகவுள்ள இந்த அறிக்கை அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தவெக-வின் கொள்கைகளும் எதிர்காலத் திட்டங்களும் இந்த அறிக்கையின் மூலம் அதிகாரப்பூர்வமாகத் தெரியவரும் என்பதால் தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

 

 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.