மோடி பேர கூட சொல்லமாட்டார் விஜய்!. தவெகவோடு காங்கிரஸ் கூட்டணி தற்கொலைக்கு சமம்!.. பொங்கும் கோபண்ணா!..
Webdunia Tamil March 04, 2026 12:48 PM


ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு என கேட்டுவந்த காங்கிரஸ் தற்போது அது கிடைக்காது என்பதால் 39 சட்டமன்ற தொகுதிகளையும், ஒரு ராஜ்யசபா தொகுதியையும் கேட்கிறது. ஆனால், திமுகவோ 25 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்ய சபா சீட் கொடுப்பதாக சொல்கிறது. எனவே இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை..

எனவே, திமுக - காங்கிரஸ் கூட்டணி நீடிக்குமா என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் பா.சிதம்பரம் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசி வருகிறார். இதையடுத்து, திமுக - காங்கிரஸ் கூட்டணி இடையே ஏற்பட்ட விரிசல் சரிசெய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் கோபண்ணா டெல்லியிலிருந்து தமிழக தொலைக்காட்சி ஒன்றுக்கு கொடுத்த பேட்டியில் ‘காங்கிரஸில் சிலர் தவெகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என விரும்பினர். ஆனால், பெரும்பாலானோருக்கு அதில் விருப்பமில்லை. அந்த பிரச்சனை சரி செய்யப்பட்டுவிட்டது.

தவெகவுடன் கூட்டணி வைப்பது தற்கொலைக்கு சமம். பாஜகவை எதிர்க்க அஞ்சும் விஜயுடன் எப்படி காங்கிரஸ் வைக்க முடியும்?.. இப்போது சிதம்பரம் பேசிக்கொண்டிருக்கிறார். திமுக - காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது உண்மை. ஆனால், அது சரி செய்யப்படும். திமுக - காங்கிரஸ் கூட்டணி ஒரு வெற்றிக்கூட்டணி. மக்கள் ஏற்றுக்கொண்ட கூட்டணி’ என கருத்து தெரிவித்திருக்கிறார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.