இன்று மார்ச் 5ம் தேதி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் சுவாமித்தோப்பு அய்யா வைகுண்டசாமி திருத்தலத்தில், அவதார நாள் விழா விமர்சையாக நடைபெறுவதை முன்னிட்டு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அய்யா வைகுண்டரின் 194-வது அவதார தினத்தை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று மார்ச் 4ம் தேதி அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாகர்கோவில் முதல் சுவாமிதோப்பு வரை நடைபெறும் பிரம்மாண்டமான 'அவதார தின ஊர்வலம்' இதில் மிக முக்கியமானது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வரும் மார்ச் 14-ஆம் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே போன்று தூத்துக்குடி மாவட்டத்திலும் அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு இந்த விடுமுறை பொருந்தும். இருப்பினும், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இதில் விலக்கு அளிக்கப்படலாம்.
தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள அய்யா வழி வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பக்தர்கள் அதிகம் உள்ள பகுதிகளில் உள்ளூர் விடுமுறைக்கான கோரிக்கைகள் ஏற்கப்பட்டு, மாவட்ட நிர்வாகம் மூலம் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

இந்த ஆண்டின் 194வது அவதார திருவிழா இன்று மார்ச் 4ம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மேற்கண்ட நான்கு மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் மாநில அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பொதுத்தேர்வுகள் நடைபெறும் பள்ளிகள், தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் இந்த விடுமுறைக்கு உட்படமாட்டார்கள். திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த விடுமுறை செலவாணி முறிச்சட்டத்தின் கீழ் அறிவிக்கப்படாததால் வங்கிகளுக்கு பொருந்தாது. கருவூலங்கள் குறைந்தபட்ச பணியாளர்களுடன் செயல்படும். விடுமுறைக்கான ஈடாக மார்ச் 14ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!