ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, பிப்ரவரி 28 அன்று அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டு தாக்குதலில் கொல்லப்பட்டதை தொடர்ந்து, அவரது மகன் மொஜ்தபா ஹொசைனி காமேனி புதிய உச்ச தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஈரானின் நிபுணர்கள் குழு இவரை தேர்ந்தெடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 36 ஆண்டுகள் ஈரானை ஆட்சி செய்த காமேனி, 'ஆபரேஷன் எபிக் ஃபியூரி' என்ற பெயரில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் தனது குடும்பத்தினருடன் உயிரிழந்தார்.
தற்போது நான்காவது நாளை எட்டியுள்ள இந்த போரில், இதுவரை 700-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு பதிலடியாக ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல்கள் துபாய், கத்தார் மற்றும் பஹ்ரைன் ஆகிய வளைகுடாப் பகுதிகளைப் பாதித்துள்ளன.
டொனால்ட் டிரம்ப் பேச்சுவார்த்தைக்கு இனி இடமில்லை என எச்சரித்துள்ள நிலையில், காமேனியின் மகன் புதிய உச்ச தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva