தமிழக அரசியலில் 1996-ம் ஆண்டு நரசிம்ம ராவ் எடுத்த தவறான முடிவு தமிழக காங்கிரஸை படுகுழியில் தள்ளியது. அன்று தொண்டர்களின் விருப்பத்திற்கு மாறாக அதிமுகவுடன் கூட்டணி அமைத்ததால், மூப்பனார் பிரிந்து சென்று காங்கிரஸ் தரைமட்டமானது. இன்று, 2026 தேர்தலை நோக்கிய பயணத்தில் ராகுல் காந்தி அதேபோன்றதொரு வரலாற்று பிழையைச் செய்கிறாரா என்ற கேள்வி அரசியல் விமர்சகர்களிடையே எழுந்துள்ளது.
திமுக கூட்டணியில் இணக்கமாக இருந்தாலும், தொகுதி பங்கீட்டில் காங்கிரஸ் தொடர்ந்து அடக்கி வாசிப்பது அக்கட்சியின் தனித்துவத்தை அழித்து வருவதாக கூறப்படுகிறது. 1996-ல் தலைவர்களின் பிடிவாதத்தால் ஒரு சீட் கூட வெல்ல முடியாத நிலை உருவானது போல, 2026-லும் போதிய இடங்களை பெறாவிட்டால் அல்லது வலுவான வியூகம் இல்லையென்றால் காங்கிரஸ் பெரும் பின்னடைவை சந்திக்கும் என அரசியல் விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர்.
விஜய்யின் தவெக போன்ற புதிய சக்திகளின் வருகை வாக்குகளை பிரிக்கும் நிலையில், காங்கிரஸ் வெறும் 'ஒட்டுண்ணி' கட்சியாகவே நீடித்தால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறுவது குதிரைக்கொம்பாக மாறலாம். ராகுல் காந்தி தேசிய அளவில் கவனம் செலுத்தினாலும், தமிழக காங்கிரஸின் வேர்களை காக்க தவறினால் 1996 வரலாறு மீண்டும் திரும்ப வாய்ப்புள்ளது.
Edited by Siva