தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள புதிய 'உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை' எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த திட்டம் 2026 ஜனவரி முதல் அமலுக்கு வரும் என்று அரசு அறிவித்துள்ளது. ஆனால், 2025 டிசம்பரில் ஓய்வு பெறுபவர்கள் இந்த திட்டத்தின் பலன்களை பெற முடியாது என்பதால் தாங்கள் பாதிக்கப்படுவதாக கூறி, விருப்ப ஓய்வு பெற்ற அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியை ரேணுகாதேவி இந்த வழக்கை தொடர்ந்துள்ளார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இது குறித்து மூன்று வாரங்களுக்குள் விரிவான பதிலளிக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரசு பணியாளர்களின் ஓய்வூதிய உரிமைகள் தொடர்பான இந்த வழக்கு, ஊழியர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. திட்டத்தின் அமலாக்கத் தேதி மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நீதிமன்றம் எடுக்கப்போகும் முடிவு, வரும் காலங்களில் ஓய்வு பெறும் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்களுக்கு முக்கியமானதாக அமையும்.
Edited by Siva