தஞ்சையில் போலீஸ் வாகனம் ரிவர்ஸ் எடுத்ததால் விபத்தா? விஜய்யை பின் தொடர்ந்தவர்களுக்கு நேர்ந்த சோகம்
Top Tamil News March 05, 2026 03:48 PM

தஞ்சையில் தவெக கட்சி தலைவர் விஜயின் வாகனத்தை பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் வாகனத்தை பார்க்காமல் அதன் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளனர். ஆனால், போலீஸ் வாகனம் ரிவர்ஸ் எடுத்ததால் விபத்து நிகழ்ந்ததாக வதந்தியைப் பரப்பி வருகின்றனர் என தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.

தஞ்சையில் தவெக கட்சி தலைவர் விஜய்யை பின்தொடர்ந்த வாகனம் விபத்துக்குள்ளானதுக்கு காரணம் போலீஸ் வாகனம் ரிவர்ஸ் எடுத்ததே என்று சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பப்படுகிறது. இதுதொடர்பாக பரப்பப்பபடும் வீடியோவில் இருசக்கர வாகனத்தில் வரும் நபர்கள், விஜயை பார்த்துக் கொண்டு முன்னால் இருந்த வாகனத்தை பார்க்காமல் செல்கின்றனர். அதில், ஒரு இரு சக்கர வாகனம் போலீஸ் வாகனம் அருகில் வந்து இடிக்காமல் தப்பித்து நகர்ந்து செல்கிறது. ஆனால், மற்றொருவர் போலீஸ் வாகனத்தை பார்க்காமல் இடித்ததில் விபத்து ஏற்பட்டு இருக்கிறது.

வீடியோவில் போலீஸ் வாகனம் சாலையில் வாகனம் செல்லும் பகுதியில் நிற்கவில்லை, சாலை முடியும்(சர்வீஸ் பகுதியில்) நிற்பதை பார்க்கலாம். ஆனால், போலீஸ் வாகனம் ரிவர்ஸ் எடுத்ததால் விபத்து நிகழ்ந்ததாக வதந்தியைப் பரப்பி வருகின்றனர்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.