இளம் இசையமைப்பாளராக தென்னிந்திய மொழிகளில் கலக்கிவருபவர் சாய் அபயங்கர் (Sai Abhyankkar). இவர் ஆரம்பத்தில் தமிழ் மக்கள் மத்தியில் ஆல்பம் பாடல்களும் மூலமாக பிரபலமானார். கடந்த 2024ம் ஆண்டில் கஞ்சி சேர (Katchi Sera) என்ற ஆல்பம் பாடலின் மூலம் பிரபலமான இவர், அதை தொடர்ந்து அடுத்தடுத்த ஆல்பம் பாடல்களையும் வெளியிட்டுவந்தார். இதுவரையில் இவரின் இசையமைப்பில் மொத்தமாக 4 ஆல்பம் பாடல்கள் வெளியாகியிருந்த நிலையில், தற்போது 5வது ஆல்பம் பாடலையும் வெளியிட்டுள்ளார். “பவழ மல்லி” (Pavazha Malli) என்ற இந்த பாடலை இவரே இசையமைத்து பாடியுள்ளார். மேலும் இதில் நடிகையும், பாடகியுமான ஷ்ருதி ஹாசனும் (Shruti Haasan) இணைந்து பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடலின் புரோமோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலத்தை பெற்றிருந்த நிலையில், இன்று 2026 மார்ச் 5ம் தேதி, காலையில் இதன் ஆடியோ பாடல் வெளியாகியிருந்தது.
இது ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்த நிலையில், தற்போது இப்பாடலின் வீடியோ பாடலை நடிகர் சிலம்பரசன் வெளியிட்டுள்ளார். இதில் சாய் அபயங்கர் மற்றும் நடிகை கயாடு லோஹர் (Kayadu Lohar) இணைந்து நடமாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆரம்பிகலமா? ரஜினிகாந்தின் ‘தலைவர் 173’ பட ப்ரீ-ப்ரொடக்ஷன் பணிகள் தொடக்கம்!
Happy to release another banger from my dear thambi @SaiAbhyankkar’s #Pavazhamalli. Sure this will break all your previous records. God bless you with greater success ahead. Proud of you, thambi! 🙏♥️https://t.co/LYw08cMB0W
— Silambarasan TR (@SilambarasanTR_)
பவழ மல்லி பாடலையும் சேர்த்து இதுவரை சாய் அபயங்கரின் இசையமைப்பில் 5 ஆல்பம் இன்டீ பாடல்கள் வெளியாகியுள்ளது. அதில் முதல் படத்தில் சம்யுக்தா, இரண்டாவது பாடலில் ப்ரீத்தி முகுந்தன், மூன்றாவது பாடலில் நடிகை மீனாக்ஷி சௌத்ரி, 4வது பாடலில் நடிகை சான்வே மேகானா மற்றும் தற்போது வெளியாகியுள்ள 5வது ஆல்பம் பாடலான “பவழ மல்லி” பாடலில், டிராகன் பட நடிகை கயாடு லோஹர் என பல்வேறு நடிகைகளுடன் இணைந்து சாய் அபயங்கர் பணியாற்றியுள்ளார். நடிகர்களுக்கு இணையாக இவரின் நடிகைகள் தேர்வுகளும் இருக்கிறது என வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
இதையும் படிங்க: நமது கலாச்சாரத்தை பேசும்.. கருப்பு படம் ஏப்ரல் ரிலீஸ் – சாய் அபயங்கர் உறுதி!
தமிழில் பென்ஸ் என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக சாய் அபயங்கர் அறிமுகம் செய்யப்பட்டார். ஆனால் இன்னும் இப்படம் ரிலீசிற்கு வரவில்லை. இந்நிலையில் இவருக்கு முதல் தமிழ் படமாக அமைந்தது பிரதீப் ரங்கநாதனின் டியூட். இதன் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். இதையடுத்து சூர்யாவின் கருப்பு, தனுஷின் டி55, கார்த்தியின் மார்ஷல், அல்லு அர்ஜுனின் AA22 என பல படங்களுக்கு இசையமைப்பாளராக பணியாற்றிவருகிற. இதன் மூலம் இவருக்கு பான் இந்திய வரை பிரபலம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தற்போதுவரும் புது படங்களுக்கும் இவரை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்ய பேச்சுவார்த்தைகளும் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.