#BIG NEWS : தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி திடீர் மாற்றம்..! புதிய ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் நியமனம்..!
Top Tamil News March 06, 2026 09:48 AM

 தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் நியமிக்கப்பட்டுள்ளார். கேரள ஆளுநராக பதவி வகிக்கும் ராஜேந்திர விஸ்வநாத்துக்கு தமிழக ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மேற்கு வங்க ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.மேற்கு வங்க ஆளுநராக இருந்த சி.வி. அனந்த போஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட குடியரசு தலைவர், மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என். ரவியை நியமனம் செய்து உத்தரவிட்டார்.

அதேபோல, இமாச்சல பிரதேச ஆளுநராக இருந்த ஷிவ் பிரதாப் சுக்லா, தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். தெலங்கானா ஆளுநராக இருோந்த ஜிஷ்ணஉ தேவ் வர்மா, மகாராஷ்டிரா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். நாகலாந்து ஆளுநராக நந்த் கிஷோர் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.