மத்தியப் பிரதேச மாநிலம் தமோ மாவட்டத்தில் உள்ள சமன்னா கிராமத்தில், சகோதரத்துவத்தைக் கொண்டாடும் ‘பாய் தூஜ்’ பண்டிகை அன்று 16 வயது சிறுவன் பாரத் விஸ்வகர்மா கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனது சகோதரியைச் சந்திக்கச் சென்ற பாரத்தை, அதே பகுதியைச் சேர்ந்த குடா படேல் என்பவர் இரும்புத் தடியால் தாக்கி, பின்னர் சுத்தியலால் அடித்துக் கொலை செய்துள்ளார்.
சிறையிலிருந்து சமீபத்தில் ஜாமீனில் வெளிவந்த குடா படேல், சிறுவனைக் கொன்றதோடு மட்டுமல்லாமல், ரத்தத்தைக் குடித்ததாகவும், சதையைத் தின்ன முயன்றதாகவும் நேரில் பார்த்தவர்கள் கூறியிருப்பது அப்பகுதி மக்களிடையே மிகுந்த பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கொடூரத் தாக்குதலுக்கு எந்தவிதமான முன்விரோதமும் காரணமில்லை என்றும், சிறுவன் சாலையில் நடந்து சென்றபோது திடீரென இந்தத் தாக்குதல் நடந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கொலையாளி குடா படேல் ஏற்கனவே தனது மனைவியைக் கொலை செய்த வழக்கில் சிறை சென்றவர் என்பதும், அவருக்கு மனநல பாதிப்பு இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
“>
கிராம மக்களால் பிடிக்கப்பட்டு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட உள்ளன. ஒரு புனிதமான பண்டிகை நாளில் நடந்த இத்தகைய மனிதாபிமானமற்ற செயல் ஒட்டுமொத்த கிராமத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.