'இந்தியாவை அமெரிக்காவின் அடிமை நாடாக மாற்றிவிட்டார்; பாஜக ஆட்சியில் பாதுகாப்பாக இல்லை'; பிரதமர் மோடியை விமர்சித்துள்ள பெ.சண்முகம்..!
Seithipunal Tamil March 07, 2026 01:48 PM

அணு ஆயுத போட்டி காரணமாக ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் உடன் கூட்டு சேர்ந்து தாக்குதல் நாடத்தி வருகிறது. இதற்கு ஈரானும் பதில் தாக்குதல் நடத்தவுள்ளது. 

இந்த போர் பதற்றம் காரணமாக உலகளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தவிர்க்க, இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்க கருவூலத் துறை (US Treasury Department) 30 நாட்களுக்கு விலக்கு அளித்துள்ளது. 

இதற்கு இந்திய அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதாவது, ஒரு நாடு யாரிடம் எண்ணெய் வாங்கவேண்டும் என இன்னொரு நாடு எப்படி அனுமதி அளிக்கும் அல்லது உத்தரவிடும் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில், அமெரிக்காவின் இந்த அனுமதி குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் பெ.சண்முகம் கடுமையாக விமர்சித்து பதிவிட்டுள்ளார். 

''பிரதமர் மோடி இந்தியாவை அமெரிக்காவின் அடிமை நாடாக மாற்றிவிட்டார் போலும். எந்த நாட்டிடம் இருந்து, எத்தனை பேரல் கச்சா எண்ணெய், எவ்வளவு நாட்களுக்கு வாங்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியாவுக்கு உத்தரவிடுகிறார் என்றால் இதன் பொருள் என்ன? இந்தியா பாஜக ஆட்சியில் பாதுகாப்பாக இல்லை என்பது தானே!

அமெரிக்காவுக்கு அடிமையாக இருப்பது பாஜககாரர்களுக்கு பெருமையாக இருக்கலாம். ஆனால் இந்தியர்களுக்கு பெருத்த அவமானம். வன்மையான கண்டனத்தை வெளிப்படுத்துவோம்." எனக் குறிப்பிட்டுள்ளார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.