போர் எதிரொலி!.. சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு!. மக்கள் அதிர்ச்சி!..
WEBDUNIA TAMIL March 07, 2026 02:48 PM


சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இந்த இரண்டின் அடிப்படையிலேயே பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது..

தற்போது ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளில் போர் நடைபெற்று வருவதால் எரிபொருட்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டு இருக்கிறது., குறிப்பாக கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. ஏற்கனவே பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை அதிகரிக்கும் என சொல்லப்பட்டுள்ள நிலையில் இன்று இந்தியாவில் கேஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது

14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சமையல் சிலிண்டரின் விலை நேற்று நள்ளிரவு முதல் 60 ரூபாய் அதிகரித்திருக்கிறது. தலைநகர் டெல்லியில் 835க்கு விற்கப்பட்ட சிலிண்டர் விலை 913 க்கும் சென்னையில் 928.50க்கும் விற்கப்படுகிறது. அதேபோல் ஹோட்டல் மற்றும் உணவகங்களில் பயன்படுத்தப்பட்டு வரும் 19 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விஅலி 114.50 உயர்த்தப்பட்டிருக்கிறது..

கடந்த மகளிர் தினத்தில் சமையல் சிலிண்டரின் விலை 100 ரூபாய் குறைத்த மத்திய அரசு நிலையில் இந்த மகளிர் தினத்திற்கு 60 ரூபாய் உயர்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
© Copyright @2026 LIDEA. All Rights Reserved.