இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா. சர்வதேச கிரிக்கெட்டில் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்கிறார். கடந்த சில ஆண்டுகளாக தனது அசாத்திய பந்து வீச்சு மூலம் எதிரணியை திணறடித்து வருகிறார்.
இந்த நடப்பு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பந்துவீச்சின் மூலம் இந்திய அணி வெற்றி பெறுவதை உறுதி செய்து வருகிறார்.
கடந்த 05 ஆம் தேதி (வியாழன் கிழமை) நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற முக்கிய காரணமாக பும்ரா விளங்கினார்.

அந்த ஆட்டம் மதிமேல் பூனையை இரு அணிகளுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருந்த நேரத்தில் கடைசி டெத் ஓவரில் அவர் வீசிய பந்து வீச்சுதான் இந்திய அணி வெற்றியை உறுதிப்படுத்தியது.
இந்த நிலையில், வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா, சர்வதேச கிரிக்கெட்டில் புது சாதனை படைத்துள்ளார். இது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பி.சி.சி.ஐ. X தளத்தில் பதிவிட்டுள்ளது.