வாட்ஸ்அப்-பில் 'Hi' என்று மெசேஜ் அனுப்பினால் போதும்.. உடனே ஆம்புலன்ஸ் ஓடி வரும்.. தமிழக அரசு
Webdunia Tamil March 07, 2026 04:48 PM

தமிழ்நாடு அரசு மருத்துவ சேவையில் மற்றுமொரு மைல்கல்லாக, தற்போது வாட்ஸ்அப் மூலம் ஆம்புலன்ஸ் வசதியை பெறும் புதிய நடைமுறையை அறிமுகம் செய்துள்ளது.

இந்த சேவையை பயன்படுத்த விரும்புவோர், 9445030725 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப்பில் 'Hi' என்று செய்தி அனுப்பினால் போதும். விபத்து அல்லது அவசர தேவை இருக்கும் இடத்தின் இருப்பிடத்தை மொபைல் ஜிபிஎஸ் மூலம் இந்த சேவை துல்லியமாக கண்டறியும். இதன் மூலம் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் எவ்வித தாமதமுமின்றி விபத்து நடந்த இடத்தை சரியாகச் சென்றடைய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவசர காலத்தில் பதற்றத்தில் இருப்பவர்களுக்கும், 108 என்ற எண்ணை உடனடியாக தொடர்பு கொள்ளத் தெரியாதவர்களுக்கும் இந்த வாட்ஸ்அப் சேவை பெரும் உதவியாக இருக்கும்.

தமிழக அரசின் இந்த நவீன ஆம்புலன்ஸ் சேவை அறிமுகம், விபத்தில் சிக்கியவர்களின் இன்னுயிரை காப்பதில் மிக முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.